• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருத்து சுதந்திரத்திற்கு போராடும் வழக்கறிஞருக்கு அமெரிக்க அரசு விருது

நைஜீரியா நாட்டின் கானோ (Kano) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோலா அலப்பின்னி (Kola Alapinni).

கோலா, இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் (Essex) பல்கலைக்கழகத்தில் சர்வதேச மனித உரிமைகள் சம்பந்தமான சட்ட படிப்பில் பட்டம் பெற்றவர்.

சட்டத்துறையில் ப்ரோ போனோ (pro bono) எனப்படும், வழக்கறிஞருக்கான கட்டணத்தை பெறாமல், இலவசமாக, பொது நன்மைக்காக வாதாடும் முறையில், கோலா பலருக்காக வாதாடி வருகிறார்.

மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, கடும் தண்டனை பெற இருந்த பலரின் சார்பாக கோலா வாதாடி, அவர்களை கடும் தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

ஷரியா சட்டப்படி குற்றம் இழைத்ததாக கருதப்பட்டு தண்டனைக்குள்ளாகும் பல ஏழை எளிய மக்களுக்கு கோலா சட்ட ஆலோசனையையும், உதவியையும் வழங்கி வருகிறார்.

இவரது உயிருக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த யஹாயா ஷரீஃப்-அமினு எனும் பாடகரின் சார்பில் கோலா வாதாடியதால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

கோலாவின் திறமையால் பல வருடங்கள் சிறை தண்டனை பெற இருந்த 13 வயது சிறுவன் ஒருவனுக்கு தண்டனை ரத்தானது.

கோலாவின் சேவையை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திர விருது (International Religious Freedom Award) எனும் உயரிய விருதை வழங்கியுள்ளது.

இது குறித்து கோலா தெரிவித்ததாவது:

வாழ்வா, சாவா எனும் ஆபத்தான நிலையில் உள்ள பலருக்கு எங்கள் பணி மெல்லிய நம்பிக்கையை தருகிறது. எப்போது வேண்டுமானாலும் அடிப்படைவாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து எங்களுக்கு உள்ளது. 2015ல் ஒரு கும்பல் காவல் நிலையத்தையும் நீதிமன்ற அறையையும் தீ வைத்து எரித்தது. எனது பல வருட போராட்டங்களுக்கான அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.

இவ்வாறு கோலா கூறினார்.
 

Leave a Reply