• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆருடன் சண்டை காட்சி... ஒரே குத்துல உடைந்த முகம்- நம்பியார் ப்ளாஷ்பேக்

சினிமா

தொடக்கத்தில் பலவிதமாக கேரக்டரில் நடித்து பிரபலமான நம்பியார் திகம்பர சாமியார் என்ற படத்தில் 11 கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் க்ளாசிக் படங்களில் வில்லன் கேரக்டரில் முத்திரை பதித்த நடிகர் எம்.என். நம்பியார், எம்.ஜி.ஆர் படத்தில் தான் சந்தித்த முக்கிய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

1919-ம் ஆண்டு கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நம்பியார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். தனது பள்ளிப்படிப்பை நீலகிரியில் முடித்த நம்பியார், அன்றைய காலகட்டத்தில் நாடக கலையில் சிறந்து விளங்கிய நவாப் ராஜமாணிக்கத்தின் குருகுலத்தில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார்.

நாடகத்தில் பல விதமாக கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்ற நம்பியார் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். தொடக்கத்தில் பலவிதமாக கேரக்டரில் நடித்து பிரபலமான நம்பியார் திகம்பர சாமியார் என்ற படத்தில் 11 கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். பின்னாளில் எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கே வில்லனாக நடித்து வந்த நம்பியார் குறிப்பாக எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக நடித்தது மக்கள் மத்தியில் இவரை பார்த்தாலே வில்லன் என்ற மனநிலை உருவானது.

இதில் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படம் வெளியானபோது இந்த படத்தை நம்பியார் மக்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். அந்த படத்தின் இறுதி காட்சியில் எம்.ஜி.ஆர் ஒரு குத்து விடும்போது நம்பியாரின் முகம் உடைந்து போகும். அதன்பிறகு தான் அவர் நம்பியார் என்பது தெரியவரும். முகம் உடைந்து போனதால் நம்பியார் அண்டர் க்ரவுண்டுக்கு சென்று படிக்கட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்வார்.

அப்போது எம்.ஜி.ஆர் படிக்கட்டில் இறங்கி வரும்போது படம் பார்க்கும் மக்கள் படிக்கட்டில் இறங்காதே, அங்கு நம்பியார் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான் என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர் இதன் மூலம் எம்.ஜி.ஆர்க்கு படத்தில் மட்டுமல்ல ரியல் ஃலைப்பிலும் நம்பியார் வில்லன் என்றே மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் என நம்பியார் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
 

Leave a Reply