• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவகாமியின் செல்வன் ...ஜனவரி 26, 1974

சினிமா

தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்ற. ஆராதனா படத்தை 1973ல் மொழி மாற்றம் செய்யப் பலரும் தயங்கிய வேளையில் சிவாஜி, வாணிஶ்ரீ ஜோடியாக நடிக்க சிவகாமியின் செல்வன் படம் தயாரானது.

அரசியல் ரீதியாகப் பார்க்கப்போனால், இரண்டுமுறை திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த நேரம்... எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை ஆரம்பித்து இருந்தார். பழைய காங்கிரசின் தலைவரான காமராஜர் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரம். சிவாஜி ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் காமராஜர். அதனால், 'ஆராதனா' படத்தைத் தமிழில் எடுத்த போது 'சிவகாமியின் செல்வன்' என்றே படத்துக்குப் பெயரிட்டார் . காமராஜர் அம்மாவின் பெயர் சிவகாமி.

பாடல்களுக்காகவே ஓடிய படம் என்பதால், எம்.எஸ்.விஸ்வநாதன்  சிறப்புக் கவனம் எடுத்து இசை அமைத்த படம். அதுவும் ரூப் தேரா மஸ்தானா பாடலை வழக்கமாக சிவாஜிக்குப் பின்னணிக்குரல் கொடுக்கும் டி.எம்.எஸ்ஸுக்கு பதிலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தைப் பாட வைத்து இருந்தார். அது இன்னமும் எஸ்.பி.பியின் தனிப்பாடல்களின் இசை ஆர்வலர்களுக்கு சவால் விடும் ஒரு மைல்ஸ்டோனாக இருக்கிறது.

சிவாஜியைப்பொறுத்தவரை அப்பா பிள்ளையென இரண்டு வேடங்கள். திருமணத்துக்குமுன்பே தன் ஆருயிர்க்காதலன் விமானப்படை வீரர் விமான விபத்தில் இறந்திட. கர்ப்பிணிப்பெண்ணான காதலி தன் மகனை விமானப்பைலட்டாக உருவாக்கும் கதை. பாடல்கள், ஆட்டம், பாட்டம் என முதல் பாதி. சோதனைகளைச் சாதனையாக்கும் அம்மாவாக அடுத்தபாதி. அந்தக் காலகட்டத்தில் வந்த வித்தியாசமான திரைக்கதை.

பெரிய சிவாஜி வருகின்ற போதெல்லாம் ஹே ஏஹே... எனும் ஹம்மிங்கை படம் முழுவதும் ஓட விட்டு எம்.எஸ்.வி அவர்கள் புது விதமான யுக்தியைக் கையாண்டிருப்பார். 'உள்ளம் ரெண்டும்', 'மேளதாளம் கேட்கும் காலம்', 'இனியவளே இன்று பாடிவந்தேன்', 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது', 'ஆடிக்குப் பின்னே' மற்றும் எதற்கும் ஒரு காலமுண்டு' என அத்தனைப்பாடல்களும் தேனில் நனைத்த பலா வென இனிப்பானவை.

சிவகாமியின் செல்வன். 1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியானது. இதில் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, எம்என் ராஜம், எஸ்வி ரங்காராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  சிவாஜியும் லதாவும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

படத்தின் நாயகி  வாணிஶ்ரீ ஒரு பேட்டியில் சிவாஜியை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் வசந்தமாளிகை ஏற்கெனவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படம். அதைப்போலவே எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரம். சிவாஜி அவர்கள் என்னைப்பார்க்கும் பொழுதெல்லாம் நான் புடவை அணியும் அழகை எந்த வித சுருக்கமோ தொய்வோ இல்லாமல் உடுத்தும் அழகை எனது காஸ்ட்யூம் சென்ஸையும் ரொம்பவே பாராட்டுவார். (உண்மை இன்றைக்கும் ஜவுளிக் கடைகளில் இருக்கும் புடவை கட்டிய பொம்மைகளுக்கு மாடல் 'வசந்த மாளிகை' வாணிஶ்ரீதான்)
.
Paravasam Nayagan

Leave a Reply