• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடகி பவதாரிணி சிறப்பு பதிவு

சினிமா

பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பின்னணி பாடகியாக மட்டும் அல்லாமல் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.
இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார்.
இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி. இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.
அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டான பாடல்.
“ஒளியிலே தெரிவது தேவதையா
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா - அது
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ” என்ற பாடலில் இவரின் குரல் அற்புதம் செய்து இருக்கும்.அனைவரின் உணர்வுகளையும் கட்டிபோடும் அளவுக்கு இருக்கும்.
மேலும் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய அண்மையில் ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும். இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.‌
இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!

Rj Nila  
 

Leave a Reply