• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமல் போன சிறுவர்கள் குறித்து பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை

நாட்டில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொரலஸ்கமுவ – வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனும், கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனும், ஹற்றன் – பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், யடியன தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவரும் என 4 பேர் காணாமல் போன சிறுவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், எடரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, நோர்வூட்டைச் சேர்ந்த 82 வயதான பெண்ணும், மொறட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணும், பள்ளம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் ஒருவரும் காணாமல் போனவர்களில் அடங்குவதாவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க, கடந்த இரண்டு தினங்களில் மட்டும் நாட்டில் 12 பேர் காணாமற் போயுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply