• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகத்தின் உடல் பாகங்கள் மீட்பு

கனடா

கனடாவில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் ஒன்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. டைரானோசர் (tyrannosaur)எனப்படும் வகை டைனோசர் ஒன்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடனாவின் அல்பேர்ட்டாவில் இந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதையுண்டிருந்த நிலையில் காணப்பட்ட, உயிரிழந்த டைனோசர் ஒன்றின் வயிற்றுப் பகுதி பாதுகாப்பாக மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.

உடல் பாகங்களிலிருந்து கற்கள் மற்றும் மண் என்பனவற்றை நீக்குவதற்கு சில ஆண்டுகள் தேவைப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விலங்கின் உணவு முறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை அறிந்து கொள்ள இந்த உடல் பாகங்கள் உதவும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட விலக்கின் வயிற்றில் அது உட்கொண்ட உணவுப் பொருட்கள் காணப்படுவதாக கல்கரி பல்கலைக்கழக பேராசிரியர் டார்லா செலினிட்ஸ்கீ தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply