• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தோல்வியில் முடிந்த காசா போர் நிறுத்த தீர்மானம்

காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தாக்குதலானது 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
  
இதன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த பிறகு, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், 1971ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஐ நா சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய குட்டெரெஸ், காசா அதன் உடையும் புள்ளியில் உள்ளது என கவுன்சிலை எச்சரித்தார்.

அத்துடன் பல லட்சம் அவநம்பிக்கையான மக்கள் மிகவும் மோசமான பட்டினியின் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இவை பொது அமைதியை பாதிக்கும், மக்களுக்கு எகிப்தை நோக்கி இடம்பெயரும் அழுத்தத்தை உருவாக்கும் என ஐ.நா நம்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.

ஹாமஸ் படையினரிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக பேசி இருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட், போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply