• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2023 இல் விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள்

நிகழ்நிலையில் பிரபலமான தேடுபொறியாக விளங்குவது விக்கிபீடியாவாகும்

தற்போது அது செயற்கை நுண்ணறிவையும் உள்ளடக்கி தற்போது அனைவர் மத்தியிலும் முக்கியமான ஒரு அம்சமாக மாற்றமடைந்துள்ளது, இந்த நிகழ்நிலை தேடுபொறியில் இந்த ஆண்டில் அதிகளவில் தேடப்பட்ட தலைப்புக்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ChatGPT என்பது விக்கிப்பீடியா தரவுகளில் பயிற்றுவிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் ஒன்றாகும், இது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக விக்கிபீடியாவின் திட்டங்களின் பெரிய அளவிலான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

ChatGPT பற்றிய விக்கிபீடியா கட்டுரைகள் அனைத்து மொழிகளிலும் 79 மில்லியனுக்கும் அதிகமான பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளன.

விக்கிமீடியா அறக்கட்டளை

மேலும், விக்கிமீடியா அறக்கட்டளை தளத்தில் தகவல்களைத் தொகுத்து வழங்குக்கின்ற நிதியளிக்கும் இலாப நோக்கமற்ற வலைத்தளமாக விளங்குகின்ற அதேவேளை, விக்கிபீடியாவில் காணப்படும் தகவல்கள் உலகெங்கிலும் உள்ள தன்னார்வ ஆசிரியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த (2023) ஆண்டில் ஆங்கில மொழி மூல விக்கிபீடியா 84 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது,அதில் முதல் ஐந்து கட்டுரைகளாக ChatGPT, 2023 இன் இறப்புகள், 2023 உலகக் கோப்பை, இந்தியன் பிரீமியர் லீக், மற்றும் ஓப்பன்ஹைமர் படம் என்பன அடங்குகின்றன.

கிரிக்கெட் உலகளவில் பிரபலமான விளையாட்டு என்பதால் அதிகளாவனோரால் தேடப்பட்டுள்ளது, ஆனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து விக்கிபீடியா இதனை கண்காணிக்கத் தொடங்கிய பிறகு, விளையாட்டைப் பற்றிய கட்டுரை பட்டியலில் இடம்பிடித்தது இதுவே முதல் முறையாகும்.

விக்கிபீடியாவின் முதல் 25 பட்டியலில், விளையாட்டு நிகழ்வுகள், அமெரிக்கா மற்றும் இந்தியா தொடர்பான செய்திகள் என்பவை மிகவும் பிரபலமான தலைப்புகளாக அமைந்துள்ளன.

அதில் ஒன்றிரண்டு இந்தியத் திரைப்படங்களும், அமெரிக்க மெகாஹிட் படமான “பார்பியும்” அடங்குகின்றது.

மேலும் இந்த ஆண்டு (2023) இறந்த இரண்டு பிரபலங்களான மத்யூ பெர்ரி மற்றும் லிசா மேரி பிரெஸ்லி ஆகிய இரண்டு பேரும் பட்டியலில் உள்ளனர், தவிரவும் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் தொழிலதிபர் எலோன் மஸ்க், இந்த ஆண்டு தலைப்புச் செய்திகளை உருவாக்கியவர்களாக இடம்பிடித்துள்ளனர்.

விக்கிபீடியா தரவுகளின்படி, 2023 இல் ஆங்கில விக்கிப்பீடியாவை அணுகிய முதல் ஐந்து நாடுகளாக 33 பில்லியன் பக்க பார்வைகளுடன் அமெரிக்கா முதலாவது இடத்தினையும், 9 பில்லியன் பக்க பார்வைகளுடன் ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்தினையும், 8.48 மில்லியன் பக்க பார்வைகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தையும், 3.95 பில்லியன் பக்க பார்வைகளுடன் கனடா மற்றும் 2.56 பில்லியன் பக்க பார்வைகளுடன் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே நான்காம் ஐந்தாம் இடத்தினையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   
 

Leave a Reply