• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடோடி மன்னன்

சினிமா

'மலைக்கள்ளன், 'அலிபாபாவும் 40 திருடர்களும், 'மதுரை வீரன், 'தாய்க்குப் பின் தாரம் என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் 'நாடோடி மன்னன்' படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.
''நான் சொந்தத்தில் 'நாடோடி மன்னன்' படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், 'நாடோடி மன்னன்' ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.

'நாடோடி மன்னன்' படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு 'இஃப் ஐ வேர் கிங்' என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் 'நாடோடி மன்னன்.'
படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரமாண்டத்துக்கு மட்டுமல்ல...படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் 'ஓவல்டின்' என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் 'ஓவல்டின்' குடித்ததே அப்போதுதான்.
படம் முடிந்த பிறகு ''வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர். மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது 'நாடோடி மன்னன்'.
19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது 'நாடோடி மன்னன்'.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார். இந்தக் கூட்டத்தில்தான், ''மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்'' என்று அண்ணா பேசினார்.நாடோடி_மன்னன்
'தீன் தீன்கா சுல்தான்' என்ற இந்தி படத்தைப் பாா்த்தாா் பேரறிஞா் அண்ணா அவா்கள் .
மூன்று நாட்கள் மட்டுமே ஒரு நாட்டிற்கு இராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன் ,
அந்த குறுகிய காலத்திற்குள் அந்த நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பதுதான் என்பதுதான் அப்படத்தின் கதை .
இப்படம் அண்ணாவை மிகவும் கவா்ந்து விட்டது . அதனால் ஒரு கூட்டத்தில் பேசும்போது , " தீன் தின்கா சுல்தான்' என்ற ஒரு திரைப்படத்தைப்பாா்த்தேன் ; 
மூன்று நாட்கள் மட்டும இராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன் , அந்நாட்களுக்குள் , நாட்டிற்குத் தேவையான ,
பல திட்டங்களைத் தீட்டி , அந்த நாட்டை எப்படி செல்வச் செழிப்படையச் செய்கிறான் என்பதுதான் கதை ..
இந்த நாட்டை ஆள , எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள் . அதாவது என்னை  , ஏக் தின்கா சுல்தான் - ஒருநாள் இராஜாவாக ஆக்குங்கள் ; இந்த உலகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன் " என்ற வகையில் பேசினாா் .
இப்பேச்சு , புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.,மனதில் பதிந்து போனது . இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானதுதான் 'நாடோடி மன்னன்' திரைப்படம் .
இப்படத்தை , பெரும் பொருட் செலவில் , தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றும் , கடன் வாங்கியும் , தயாாித்தாா் 
எம்.ஜி.ஆா்.,
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் , எம்.ஜி.ஆாின் எதிா்காலம் என்ற பேச்சு எழுந்தபோது ,
" இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் ; இல்லையென்றால் நாடோடி ....." என்று தன் நிலையைக் கூறினாா் எம்.ஜி.ஆா் .
ஆனால் இப்படம் மிகப் பொிய வெற்றியைப் பெற்றது . 
'நான் மன்னன்தான் ....' என்பதை நிரூபித்தாா் எம்.ஜி.ஆா்.,#
நாடோடி_மன்னன் படம் 22-ஆம் தேதி ஆகஸ்டு 1958-ல் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ரீலீஸானது, 
அந்நாட்டின் வினியோகஸ்தாரான ஷா பிரதர்ஸ் நிறுவனம் நாடோடி மன்னன் சிறப்பு மலரை மிக பிரமாண்டமாக வெளியிட்டது.
வெற்றி நடைபோட்ட இப்படம் வெளியான திரையரங்குகளின் விபரம்:
நாடோடி மன்னன் படம் வெளியான திரையரங்குகள் (22.8.1958)
01.சென்னை பாரகன் / 161 நாள்
02.ஸ்ரீகிருஷ்ணா / 161 நாள்
03.உமா / 147 நாள்
04.சேலம் சித்தேஸ்வரா / 180 நாள்
05கோவை ராஜா / 161 நாள்
06.திருச்சி ராக்ஸி / 161 நாள்
07.மதுரை தங்கம் / 140 நாள்
08.ஈரோடு கிருஷ்ணா / 133 நாள்
09.தஞ்சை யாகப்பா / 127 நாள்
10.நெல்லை பாப்புலர் 1/ 20 நாள்
11.திருவ.மலை கிருஷ்ணா / 133 நாள்
12.நாகர்கோவில் பயோனியர் / 105 நாள்
13.வேலூர் தாஜ் / 104 நாள்
14.கரூர் அம்பிகை / 102 நாள்
15.கடலூர் பிரமிளா / 100 நாள்
16.திண்டுக்கல் சென்ட்ரல் / 105 நாள்
17.சித்தூர் பிரமிளா / 100 நாள்
18.பெங்களூர் அபேரா / 84 நாள்
19.பெங்களூர் சிவாஜி / 84 நாள்
20.பெங்களூர் நவரங் / 56 நாள்
21.திருவனந்தபுரம் சித்ரா / 98 நாள்
22.இலங்கை கிங்ஸிலி / 106 நாள்
23.இலங்கை ராஜா / 107 நாள்
24.இலங்கை கெயிட்டி / 106 நாள்
25.இலங்கை சென்ட்ரல் / 106 நாள்
26.இலங்கை பிளாசா / 112 நாள்
27.இலங்கை நவாஸ் / 101 நாள்
28.சிங்ப்பூர் ராயல் / 50 நாள்
29.கோலாலம்பூர் / லிடோ 50 நாள்
39.சென்ட்ரல் / 50 நாள்
40.ஈப்போ கிராண்ட் / 50 நாள்
41.சன் / 50 நாள்
42.பினாங்கு ராயல் / 50 நாள்
43.தைப்பிங் லிடோ /50 நாள்
44.ரெக்ஸ் / 50 நாள்
May be an image of 3 people and text that says "நாடே"
All reactions:
147147

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்

Leave a Reply