• Welcome to TamilsGuide
செய்திகள் 1

M.S.V இன் மகன் ஹரிதாஸ் கூறியது...

சினிமா

MSV ரிட்டையர் ஆன காலம். ஒரு முறை காரில் கோவிலுக்கு போய்விட்டு திரும்பி வரும் போது வடபழனி அருகே ஸ்டுடியோ பார்த்த போது உள்ள போ எதாவது பாட்டு ரெகார்டிங் பாக்கலாம் னு கூட வந்த தன மகன் ஹரிதாஸிடம் சொன்னாராம் .. அப்போது தேவா பாட்டு ரெகார்டிங் போயிட்டு இருந்ததாம். தேவா மிகப்பெரிய MSV ரசிகர்.. அவரை வரவேற்று காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கூட்டி சென்றாராம். ரிகர்சல் பாக்க.. ஆனால், இசை கலைஞர்கள் MSV முன்னனால் வாசிப்பதில் ரொம்ப நெர்வ்ஸ் ஆயிட்டாங்களாம்.. இருக்காதா பின்ன? தேவா வே வந்து அவரிடம் "அண்ணே, உங்கள பாத்து பசங்க ரொம்ப நெர்வஸ் ஆயிட்டாங்கன்னு சொல்ல - MSV யம் சிரித்து கொண்டே கலைஞர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு சென்றாராம்.

எல்லோராயம் ரசிப்பாராம். போனில் கூப்பிட்டு வாழ்த்து தெரிவிப்பாராம். சில தமாஷ் கூட செஞ்சிகிட்டே இருப்பாராம். ஒரு முறை ஒரு இளைய இசையமைப்பாளர் ( பரத்வாஜ் ன்னு நினைக்கிறன்) கூப்பிட்டு ஒரு ரசிகர் மாதிரி அறிமுக படுத்தி கொண்டாராம். அப்பறம் பேசிச்சு வாக்கில் நான் கூட ஆர்மோனியம் எல்லாம் வாசிப்பேன் பேரு விஸ்வநாதன் னு சொல்ல... அவரு கடைசியில் MSV தான்னு தெரிஞ்சுக்கிட்டு வீட்டுக்கே வந்து ஆசி பெற்று சென்றாராம்.

MSV ஒரு முறை கூட இளையராஜாவை தனக்கு போட்டியாளராக நினைத்ததில்லையாம். எப்போதும் ரசித்து மிக நெருக்கமாகத்தான் இருந்தாராம்.

AR ஹ்மானிடம் பாடிய போது ஒரு புது பாடகர் போல உற்சாகமாக மாத்தி மாத்தி விதவிதமாக பாடி அவரை திக்குமுக்காட வைத்தாராம். எதை எடுப்பது எதை விடுவதுன்னு தெரியாமல் பாடல் ரெகார்டிங் இரவு நெடு நேரம் வரை சென்றதாம்.

ராஜா அடிக்கடி வெகு காலையில் வீட்டுக்கு வந்து இசை situations பத்தி எல்லாம் பேசிகிட்டு இருப்பாராம் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் போது பல ஐடியாக்கள் கொடுத்தாராம்.

ஒரு பாட்டு கேக்கும் போது - அதை மட்டும் கேக்கணும் .. - அனாவசியமாக மத்த பாட்டோட ஒப்பிட கூடாது என்பாராம்.

இசையை தவிர ஒண்ணுமே தெரியாதாம். போன் கூட யாரவது தான் டயல் பண்ணி கொடுக்கணுமாம். அவ்வளவு இசையின் ஆழத்தில் இருந்தவர்.

எந்த பாடலும் அங்க floor போயி என்ன மனதில் வருதோ அவ்வளுதான். முன் பிரேபரேஷன் எதுவும் கிடையாதாம். திருவையாறில் ஒரு முறை தியாகராஜா உத்சவத்தில் பாடினாராம். அதுக்கு மட்டும் கொஞ்சம் சாதகம் பண்ண்ணினாராம்.
 

Leave a Reply