• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம் … - கே.வி.மகாதேவன்

சினிமா

“எம்.ஜி.ஆர் நடித்த ‘குமாரி’யுடன் கே.வி.மகாதேவனின் இரண்டாம் இசைப்பயணம் துவங்கியது.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’க்கு இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குத் தான் கிடைத்தது.
சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல் (கொஞ்சும் கிளியான பெண்ணை) மகாதேவனின் இசையில் தான் உருவானது.
கூண்டுக்கிளிக்கு மகாதேவன் பாகேஸ்வரி ராகத்தில் மிக அழகாக அமைத்த ‘மயக்கும் மாலைப் பொழுதே’ என்ற பாடல் மீது எம்.ஜி.ஆர் மையல் கொண்டு, அதை ‘குலேபகாபலி’க்கு வரித்துக் கொண்டார்.
தேவர் பிலிம்ஸூக்கு எம்.ஜி.ஆர் நடித்த 16 படங்களுக்கு டஜன் கணக்கில் கவர்ந்திழுக்கும் பாடல்களைத் தந்தவர் கே.வி.மகாதேவன்.
‘விவசாயி’யை வாழ வைத்தார்.

‘தொழிலாளி’யை மனமுருகப் பாட வைத்தார்.
எம்.ஜி.ஆரின் பிரமாண்டப் படமான ‘அடிமைப் பெண்’ணுக்கும் இசையமைத்த இவர், புதுப்பாடகர் எஸ்.பி.பி.க்கு ‘ஆயிரம் நிலவே வா’ பாடலைத் தந்து, நட்சத்திரப் பாடகர் ஆக்கினார்.
மகாதேவனுடனான எம்.ஜி.ஆரின் இசைத் தொடர்பு 23 வருடங்கள் நீடித்தது.
காதல் சுவையின் ஈர்ப்புக்கு ஒரு “சிரித்துச் சிரித்து என்னைச் சிறையில் இட்டாய்’’, மேற்கத்திய பாப் இசையின் மோஸ்தரில் வந்தாலும், தமிழ் மணம் இழக்காத எழுச்சிப்பாடலான “உன்னை அறிந்தால்”, எம்.ஜி.ஆருக்கே உரிய தன்னம்பிக்கைப் பாடலாக “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு” என்று மகாதேவனின் வெற்றிப் பாடல் வரிசை வளர்ந்தது.
எம்.ஜி.ஆருடைய பட வரிசையில் பாதை எங்கும் பாட்டு மைல் கற்கள் அணிவகுக்கும் படிச் செய்தார் மகாதேவன்’’
2019 தினமணி தீபாவளி மலரில் ‘ஏழு ஸ்வரங்கள்.. எத்தனை ராகங்கள்’ என்கிற தலைப்பில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி வாமனன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

நன்றி : தினமணி!
 

Leave a Reply