• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைலாசபதியின்  எழுத்துகளில்  ஒரு துளி---

இலங்கை

அறுபதுகளில் முற்பகுதியிலே பல்கலைக்கழக நாடகங்களிற் பல்வேறு வகைகளிற் பங்குகொண்ட திருவாளர்கள் நா.சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், சி.மௌனகுரு ஆகிய மூவரும், ஐம்பதுகளில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த வேளையில் நித்திலக் கோபுரம் (1953) என்னும் பா நாடகத்தை வானொலிக்காக எழுதியது முதல் பா நாடகத்தில் தணித்துவமான பரிசோதனைகளை பலவற்றைச் செய்து வந்துள்ள கவிஞர் இ.முருகையனும் அறுபதுகளில் பிற் பகுதியிலே நாடகத்துறையில் புத்தாக்க முயற்சிகளில் முழுமூச்சாக ஈடுபட்டனர்
. அது கால வரை பல்கலைக்கழக நாடகங்களில் பங்கு பற்றியோர் பட்டம் பெற்று வெளியேறிய பின் அத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டுழைப்பது அருமையாகவே இருந்தது. 
ஐம்பதுகளில்
 புத்தாக்கம், 
மொழிபெயர்ப்பு, 
தழுவல் 
முதலிய முயற்சிகளில் ஈடுபட்டோர், தரமான-நேர்த்தி நயம் வாய்ந்த - நாடகப் பிரதிகளை எழுதுவிப்பதிலும் தேர்ந்தெடுப்பதிலும் கூடுதலான கவனஞ் செலுத்தினரெனினும், 
அரங்க நுணுக்கங்கள், 
மேடை உத்திகள் 
முதலிய இன்றியமையாக் கலை அம்சங்களிலும் அவையாவற்றுக்கும் மேலாக நாடகங்களின் கர்த்தாக்கள் தற்புதுமையான நாடகத் துறையில் புதியதொரு காலகட்டம் சகாப்தம்-ஆரம்பமாகியதெனலாம். 
இவர்களினதும் இவரோடொத்த 
அ.தாசீசியஸ், 
மாவை நித்தியானந்தர், 
சி.தில்லைநாதன், 
தில்லைக்கூத்தன் 
முதலியோரினதும் ஆக்கத்திறனை எழுபதுகளில் கண்டுணரக் கூடியதாய் இருந்தது.
 இவர்களின் கூட்டு முயற்சிகளில் களமாகவும் விளைவாகவும்
 'எங்கள் குழு', 
'கூத்தாடிகள்', 
'நாடோடிகள்' 
'மட்டக்களப்பு நாடக சபா', 
'நடிகர் ஒன்றியம்' 
முதலிய அமைப்புக்களும், யாழ்ப்பாணத்தில் சிலர் நிறுவிய 
'அம்பலத்தாடிகள்'
 என்ற குழுவும் பிரக்ஞை பூர்வமாகப் பல முதன் முயற்சிகளை மேற்கொண்டன.
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள நாடகங்களுள்
 'அபசுரம்' (1968) காலத்தால் முற்பட்டது.
அதே ஆண்டில் இ.சிவானந்தன் எழுதிய
 'விடிவை நோக்கி'
 என்ற நாடகத்தை 'எங்கள் குழு' வினர் மேடையேற்றியிருந்தனர். 
முருகையனின் 'இருதுயரங்கள்' என்ற நாடகமும்,
 அவ்வாண்டிலேயே மேடையேற்றப்பட்டது
.
 இத்தொகுதியில் முதலாவதாக அமைந்துள்ள '
சங்காரம்' என்ற வடமோடி நாடகம் 1969-ல் அரங்கேறியது. 
இச்செய்திகளை நோக்குமிடத்து இலங்கையின் தற்காலத் தமிழ் நாடக வரலாற்றில் 1968-ம் வருடம் ஒரு திருப்பு முனையாக விளங்குகிறது 
எனக்கொள்வது தவறாகாது
. பரதநாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை உன்னிப்பாய்க் கவனித்து அவ்வப்போது தீட்சணியமான கருத்துக்களைக் கூறிவரும் இரசிகரும் விமர்சகருமான "அர்ஜுனா" (எஸ்.சிவநாயகம்)
 "1968-ல் அரங்குகள்" எனும் பொருள்பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றிலே அந்த வருடம் அரங்கேறிய நாடகங்கள் புதியதொரு மலர்ச்சியைக் குறிப்பாக நம்பிக்கை தெரிவித்திருந்தார், 
அவரது கணிப்புச் சரியானதே 
என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐயத்துக்கிடமின்றி நிரூபணமாயிற்று.
1968-ஆம் வருடத்திலும் அதனையடுத்த காலப் பகுதியிலும் இலங்கையில் தமிழ்நாடகத் துறையில், குறிப்பாக அரங்கியற்றுறையில், பின்விளைவுச் செறிவு வாய்ந்த, போற்றத்தக்க மாற்றங்களைச் செய்தோ ஒ சிலரோயாயினும் அவர்கள் காலத்தின் தேவைகளை உணர்ந்து பிரக்ஞையோடு இயங்கினர் என்பது நினைத்துகொள்ள வேண்டிய செய்தியாகும்.
 தேசிய சர்வதேச நிகழ்வுகளும் அவர்களுக்குத் தூண்டுதல் கொடுப்பனவாயமைந்தன

இலங்கையில் பொதுவாக, சமூக முரண்பாடுகள் கூர்மையடையத் துவங்கியிருந்தன.
 வட பகுதியில் சாதியடக்குமுறைக்கு எதிரான போராட்டம் உக்கிரமடைந்திருந்தது; 
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் வெற்றிகரமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தது
.
 அவ்வியக்கத்தின் முதலாவது மகாநாட்டையொட்டிக் கொழும்பில் நிகழ்ந்த கலைநிகழ்ச்சிகளில் ஒன்றாகவே 
மௌனகுருவின் 'சங்காரம்'
முதன்முதலில் ஹவ்லொக் 
நகர் லும்பினி அரங்கில் மேடையேறியது.
 சாதியொழிப்புப் போராட்டத்தின் உந்துதலினால் வரலாற்றையே உருவகமாகச் சித்தரிக்கிறது.
 இயக்கங்களுக்கும் இலக்கிய வாக்கங்களுக்குமுள்ள உள்ளார்ந்த நுணுக்கமுடைய தொடர்பினை இது எமக்கு உணர்த்துகிறது
. (தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆலயப்பிரவேசப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி அதனை வழிநடத்தி வந்த காலகட்டத்திலேயே என்.கே.ரகுநாதனின் கதைக்கருவொன்றினை நெல்லியடி 'அம்பலத்தாடிகள்' குழு கந்தன் கருணை என்னும் நாடகமாக்கி மேடையேற்றியது

. காத்தான் கூத்துப்பாணி இசை நாடக உருவலான இந் நாடகம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கொழும்பிலும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது.
 கந்தன் கருணை பின்னர் நூல் வடிவிலும் வெளிவந்தது
. "கதையின் கதை" என்ற பகுதியில் ரகுநாதன் பின்வருமாறு எழுதியிருந்தார். 
தேவையே ஒரு பொருளின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் பிறந்து, அம் மக்களின் போராட்டத்துக்கு ஓர் ஆதர்ஸமாக, ஆயுதமாக மிளிரும் இந்த நாடகத்தின் மூலக்கதையை எழுதியவன் என்ற வகையில் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது"
 1969 ஆம் வருடத்திலேயே முருகையனின் கோபுர வாசல் என்ற மேடைக் கவிதை நாடகமும் வெளிவந்தது
. ஆலயப் பிரவேசம் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருந்த காலகட்டத்தில், பழைய நந்தனார் சரித்திரக் கதையைப் பொருத்தமாக மாற்றிச் சமகாலத்துக்குத் தொடர்புடைய நாடகமாக அவர் எழுதினார். முன்னுரையில் முருகையன் கூறியிருப்பது கவனத்திற்குரியது:
"இந் நாடகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி முடிக்கப்பட்டது;
 பல காரணங்களால் இது உடனடியாக மேடையேறாமல் எழுத்துப்பிரதியாகவே என்வசமிருந்தது. இந் நாடகம் எழுதி முடித்தபின்னர் ஈழத்துச் சமுதாய வாழ்வின் சூழலிலே ஒரு சில மாற்றங்கள் முனைப்பாகத் தோன்ற ஆரம்பித்தன. 
இந்த மாற்றங்களுடனும் இயக்கங்களுடனும் நாடகத்தை இசைவுபடுத்துவது மிக அவசியம் என நான் கருதுகினேன். ஆகவே முதலில் எழுதப்பட்ட பிரதியிலே சிறு சிறு மாற்றங்கள் செய்து அவசியமாயிற்று.
சமூகப் பிரக்ஞை கொண்ட எழுத்தாளர்கள் இயக்கங்களின் செயற்பாட்டுக்கும் வேத்திற்கும் ஒத்துணர்வு மிக்கவர்களாய் இருக்கின்றனர் என்பதைச்
 சங்காரம், 
கந்தன் கருணை,
கோபுரவாசல் 
ஆகியவற்றின் ஆக்கத்திலிருந்து நாம் தெளிந்து கொள்ளலாம். 
இந் நாடகங்கள் எழுந்த காலத்திற்கு முன் பின்னாகவே காலஞ்சென்ற
 க.பசுபதி (1925-1965) 
க.தங்கவடிவேல் (1934-1979) 
ஆகியோரும் வேறுபல கவிஞர்களும் ஆற்றல் மிக்க கவிதைகளை எழுதிப் புத்துலகினைப் படைப்பதற்கான தமது பங்கைச் செலுத்தினர்
. இச் செய்திகள் யாவும் நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகின்றன: ஒரு சமுதாயத்திலே காலத்துக்குக் காலம் தோன்றும் இயக்கங்களுடனும், மனுக்குலத்தின் இடையறாத போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொண்டு அவற்றிலே "பிறப்பெடுத்து ஓங்கி நிமிரும் ஆன்ம சொரூப விகசிப்பை" இலக்கிய வடிவமாக்குபவரே கலாபூர்வமான படைப்புகளை அளிக்க வல்லவராயுள்ளனர்.
 அவர்களே தற்புதுமையான ஆக்கங்களை உருவாக்கி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
 மொழிபெயர்ப்பு; தழுவல் முயற்சிகள் இவ்வளர்ச்சிக்குப் புறத்தூண்டுதலாய் ஒரே வழி அமைக்கூடுமாயினும், "தனித்துவமான நாடக மரபொன்றின் முகிழ்ப்புக்குப் பங்களிக்கக் கூடியவையாக" அமைதல் சாத்தியமன்று. இது விஷயத்தில் அபிப்பிராய பேதம் இருக்க இடமேயில்லை).
அனைத்துலகிலும் அக் காலகட்டத்தில் பலவகைப்பட்ட எழுச்சிகளும் மரபுகளுக்கெதிரான போராட்டங்களும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன.
 சீனாவிலே கலாசாரப்புரட்சி உச்சிநிலையில் இருந்தது; 
பிரதன்சு நாட்டிலே மாணவர் கிளர்ச்சி உலகெங்கும் எதிரொலித்தது; 
புரட்சிப் பாரம்பரியம் மிகுந்த அந்நாட்டில் மற்றுமொரு புரட்சி உருவாகும் போலிருந்தது. 
இங்கிலாந்திலே பல்கலைக்கழகங்களில் உறைந்து போயிருந்த சம்பிரதாயங்களுக்கும் சத்தற்ற கல்வி முறைகளுக்கும் எதிராக ஆயிரக்கணக்கில் மாணவர் குரலெழுப்பி நடவடிக்கைகளில் இறங்கினர். 
இவை யாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்காவில் மிகப்பரந்த அளவில் ஜனநாயக இலட்சியங்களும், யுத்தஎதிர்ப்புக் குரல்களும் தேசந் தழுவிய இயக்கங்களோடு சங்கமித்தன.
 வியட்நாமில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத்துவங்கிய சமாதானக் கோரிக்கைக் குரல் விரைவிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உருமாற்றம் பெற்றது. 
கல்வி நிலையங்களில் பாட நெறிகளை மாற்றியமைப்பது முதல் கட்டாயமாக இளைஞர்களை இராணுவ சேவைக்கு அழைப்பதை எதிர்ப்பது ஈறாக எண்ணற்ற இயக்கங்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 
நிலையியல் ரீதியான சிந்தனைகளையும் நியதிகளையும் நிராகரித்த இளைஞர்கள், கலைகளில் புதுப்புதுப் பரிசோதனைகளைச் செய்து பார்த்தனர்
. நாடகத்துறை என்றுமில்லாத கவனத்தைப் பெற்றது. 
சம்பிரதாயமான இயற்கை நவிற்சி நாடகங்கள் வணிக நோக்கில் நடத்தப்படுவதால் எதிர் மரபைச் சார்ந்து நின்றோர் அரங்க நியதிகளை மாற்றி எங்கும் எப்பொழுதும் ஆடக்கூடிய பல்திறப்பட்ட நாடக வடிவங்களை உருவாக்கமுற்பட்டனர்.
 "தெருவோரத்து நாடகம் " 
இதில் முக்கியத்துவம் பெற்றது. இன்று பின்னோக்கிப் பார்க்குமிடத்து இப் பரிசோதனைகளிற் பல "சில்வாழ்நாள் " உடையனவாய் இருந்தமை புலனாகிறது
ஆரங்கில் நடிப்பது மாத்திரமன்றி,  ஆடுதலும், பாடுதலும், வாய் பேசாது அவிநயித்து உணர்வுகளை வெளிப்படுத்துதலும். அபத்தமாக நடந்து கொள்ளுதலும் இவை போன்ற பிறவும் நாடகக்கலைக்குப் புத்துயிர் அளிக்க வல்லன என்ற கருத்து இப்பொழுது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது கண்கூடு. 
இக் காலப்பகுதியில் குறியீட்டு நாடக்ங்களுக்குப் புதிய தேவையும் உண்டாயின.
1968 ஆம் வருடம் மேடையேறிய நாடகங்களும் அவற்றைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட நாடகங்களும், மேலே விபர்த்த உலக நாடகப் பரீட்சார்த்த முயற்சிகளை உள்வாங்கி 
அவற்றையும், "எமது மரபுவழி நாடக நெறிகளையும் உணர்வு பூர்வமாக இணைத்து, ஊடாட விட்டு, ஈழத் தமிழ் நாடக அரங்கியற்றுறைக்கெனத் தனித்துவமான ஒரு மரபின் " வெளிப்பாடாக அமைந்தவை எனக் கூறுவது எல்லாற்றானும் மிகையாகாது
. இதற்குத் தக்கஉதாரணங்களாக அ.தாசீசியஸ் நெறிப்படுத்தி மேடையேற்றிய
 கந்தன் கருணை, 
புதியதொரு வீடு,
 கோடை
, காலம் சிவக்கிறது ஆகியனவும்,
 நா. சுந்தரலிங்கத்தின் நெறியாள்கையில் உருவாகிய கடழியம் (1971) 
விழிப்பு (1975)
 ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. 
மேலைநாட்டு நவீன நாடக உத்திகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் அதே வேளையில் நம் நாட்டுக்குரிய அபிநயச் சிறப்பாட்டங்களை அபூர்வமான கற்பனை நயத்துடன் கலந்து நாடகத்தை உருவாக்கும் பெற்றி தாசீசியஸ’டம் காணப்படுகிறது
 புதியதொரு வீடு வெற்றியடைந்ததற்து மஹாகவி (1927-1971)யின் கவித்துவம் மாத்திரமன்றி தாசீசியஸ’ன் நெறியாள்கையும் முக்கிய காரணமாகும். 
இயல் நலமுடைய நேர்த்தியான ஆந்நாடகத்துக்கு மெருகூட்டின. 
அதைப் போலவே முருகையனின் பாடல்களைக் கொண்ட சுந்தரலிங்கத்தின் 
விழிப்பு நாடகத்தில், நெறியாளர் சுந்தரலிங்கம் ஆட்டமுறையில் தொழிலாளர் எழுச்சி€ச் சித்திரிக்கும் நுட்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது
. வடமோடிப்பாணி கைவந்த மௌனகுரு, ஆட்டமுறையில் அமைந்த அசைவுகளை நாடகங்களில் இலாவகமாகக் கையாள்வதும் பயன்தரும் பரிசோதனையாகும். 
புதிய உத்திகளோடு மரபுவழிக் கதையைக் கலைநயம் குன்றாதவகையில் நாடகமாக்கலாம் என்பதனை அம்பியின் வேதாளம் சொன்ன கதை (1970), 
நிரூபித்தது.
 சுஹைர் ஹமீட் நெறிப்படுத்திய அந்நாடகம் முருகையன் கூறுவதுபோல, "மேடையேற்றம் என்ற சோதனைக்கு உட்பட்டுத் தேறித் தேர்ச்சியடைந்துள்ளதுஇ "
இவ்வாறு அறுபதுகளின் பிற்கூறிலும் எழுபதுகளிலும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முக்கியமான பரீட்சார்த்த நாடகங்களை நமது கலைஞர்கள் சிலர் உருவாக்கிக் சொணடிருந்த காலப்பகுதியிலே அவற்றுக்குச் சமாந்தரமாகச் சிங்கள நாடகங்களும் புதிய வேகத்துடன் வெளிவந்து கொண்டிருந்தன
. ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார சமூகவியல் காரணிகள் கலைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படை உண்மைக்கு இரு மொழிகளிலும் இடம் பெற்ற புத்தாக்கங்கள் சான்றாயமைந்தன
. சிங்களத்திலும் நவீன நாடக உத்திகளோடு மரபுவழிக் கூறுகளை இணைத்துப் புதிய வடிவங்களைக் காணும் முயற்சி வலுப்பெற்றுள்ளது. 
மொழிபெயர்ப்பு, தழுவல் ஆக்கங்கள் நீடித்த நிலையான பயனைத்தரா என்பது சிங்கள நாடகக் கலைஞர்கள் அநுபவ ரீதியாகக்கண்டறிந்த உண்மையாகும். 
ஆர்.ஆர்.சமரக்கோன், 
ஸைமன் நவகத்தேகம,
 தர்மசிறி பண்டாரநாயக்கா
, தர்மசேன பத்திராஜா, 
பராக்கிரம நிரியெல்ல,
 தம்ம ஜாகொட முதலியோர் சுய ஆக்கங்களினாலேயே புகழ் ஈட்டியுள்ளனர். கவனிக்க வேண்டிய படிப்பினை இது.
இத்தொகுதி வெளிவருவதில் சிறப்பொன்றுண்டு. எத்தனையோ நாடகங்கள் மேடையில் பார்க்கும்பொழுது ஓரளவு சுவாரஸ்யமாயிருப்பினும், அவற்றை இலக்கியமாகப் போற்றத்தக்க சிறப்பற்று மறைந்துவிடுகின்றன. நடிப்பதற்கன்றி இலக்கிய நூலாக எண்ணி இயற்றப்படும் நாடகங்களும் உண்டு. அவற்றைப்பற்றி இங்கு நாம் பேசவேண்டியதில்லை.
 ஆனால் நடிப்பதற்கென்றே திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு நாடகம், மேடையில் வெற்றிபெற்று அதன் சுருத்தாழத்தினாலும், நடைச் சிறப்பினாலும், உணர்வு நலத்தினாலும் நூலாகப் படிப்பதற்கும் மீண்டும் மீண்டும் நடித்தற்கும் உதந்ததாகக் கருதப்படுமாயின் அதுவே ஆற்றல் மிக்க நாடக இலக்கியமாகும். பா நாடகங்களுக்கு இப்பண்பு சாலப் பொருந்தும். 
காத்திரமான சமூக உள்ளடக்கத்தைக் கொண்டனவாயும். உயர் கவிதையின் சொற்செறிவு, தரிசன வீச்சு, தெளிவு, ஓசைச் சிறப்பு முதலிய அம்சங்கள் பொருந்தப் பெற்றனவானவாயும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் தாண்டி உலகப் பொதுவான உணர்வுகளை எழுப்புவனவாயும் இருப்பதனாலேயே இந் நான்கு நாடகங்களும் அச்சுருவிலும் வெள்வரக்கூடியனவாய் விளங்குகின்றன, 
காட்சி நயம் மட்டும் நாடகத்துக்கு உயிரூட்ட முடியாது. கருத்து மேம்பாடு மாத்திரம் நாடகத்தை இயங்கவைத்து விடாது. இரண்டும் இயைபுற்று இயங்குவதே நாடகத்தின் உயிர் நிலையாகும். இத்தொகுதியிலுள்ள நாடகங்கள் இவ்வரைவிலக்கணத்துக்கு அமைவன. முருகையனைப்போல மேடைக்கசாக மஹாகவி எழுதிய நாடகங்களும் (கோடை, புதியதொரு வீடு) நூலுருவம் பெற்றுள்ளமை கருதத்தக்கது
. இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள நாடகாசிரியர்கள் கவிஞராயும் இருப்பது அவர்தம் படைப்புக்கள் இலக்கியச் செவிடன் விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. நாடக உணர்வு நன்கு வாய்க்கப்பெற்ற முருகையன் எழுதியுள்ள கவிதைகள் பலவற்றிலும் நாடகப் பண்புகள் அவற்றின் உள்ளியல்பாய் இருக்கக் காணலாம். 
ஆணல்டு வெஸ்கர் எழுதிய கதையொன்றைப் படித்த அருட்டுணர்வில் அவர் புதுவதாகப் புனைந்த ஆதிபகவன் (1978) என்ற நெடுங் கவிதைகூடச் சிற்சில மாற்றங்களுடன் மேடையேற்றப்படக்கூடியதே
. சமுதாய மாற்றங்களின் தேவையையும் நியதிகளையும் அறிவு பூர்வமாக இக்கலைஞர்கள் தெரிந்துகொண்டிருப்பதாலேயே சர்வ வியாபகமான நிகழ்வுகளையும் இயக்கங்களையும் தமது ஆக்கங்களுக்குப் பொருளாகக் கொள்கின்றனர். 
மௌனகுருவின் சங்காரம் 
(மௌனகுரு பரீட்சார்ந்த முயற்சியாகத் தயாரித்தளித்த) 
எம்.ஏ. நுஃமானின் அதி மானிடன் என்ற நெடுங் கவிதை
 முருகையனின் கடூழியம் முதலியன 
மனுக்குலத்தின் வரலாற்றைக் குறுகிய வடிவிற் கூறுவன
. மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971), இப்பிரிவைச் சார்ந்ததே-
 ஆதிபகவன் நூலிலே முருகையன் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
 "ஆதி பகவனின் கதை உலகின் கதை; உலக மனிதனின் கதை; ஆதி பகவனின் குடும்பம்; மனித சமுதாயம். எனவேதான் 'ஆதிபகவன்' தனிமனித குடும்பச் சித்திரம் போன்று தொடங்கினாலும், சமுதாயத்தின் வரலாறாக விரிந்து பரந்து சென்று கொண்டிருக்கிறது" 
அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு என்பது பழமொழி. 
மேற்கூறிய நாடகங்களும் நெடுங்கவிதைகளும் பேரளவினதாகிய உலக புராணத்தை மனித காவியத்தை- சுருங்கிய வாமன வடிவிற் காட்டுவன; 
அதே வேளையில் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிப்னவாயும் திகழ்வன.
 உலக இலக்கியப் பரப்பில் இத்தகைய ஆக்கங்கள் பல புகழ்பெற்றுள்ளன.
 மேற்கத்திய மொழிகளிலே ஆதாம் ஏவாள் பற்றிய கதையை மையமாகக்கொண்டும் உருவகப்படுத்தியும் பல காப்பிய நாடக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, 
ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தையடுத்து இத்தகைய உலகளாவிய கற்பனைகள் ஆற்றல் மிக்க கவிஞர்கள் பலரைக் கவர்ந்துள்ளன:
 மில்டன், பைரன் முதலிய ஆங்கிலக் கவிஞரும், 
விக்டர் ஹ’யூகோ, டூ பார்டாஸ் ஆகிய பிரெஞ்சு எழுத்தாளரும், 
ஜேர்மானிய மகாகவி கைதேயும் 
மனிதனது இடைவிடாத போராட்டத்தின் மகோன்னதத்தையும் அதில் இழையோடும் துன்பியலையும் காலப்பூர்வமான கற்பனைப் படைப்புக்களாகத் தந்துள்ளார்
. சில வருடங்களுக்கு முன்பு (1978) இம்ரே மடாக், Imre Madach (1823-1864) என்ற ஹங்கேரிய கவிஞரின் Tragedy of Man என்ற பா நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 
1848 இல் ஐரோப்பாவிலே நடந்தேறிய புரட்சிகளும் எதிர்புரட்சிகளும் இப் பாநாடகத்திற்குப் பிற்புலமாக அமைந்தன என்பதை நோக்கும்பொழுது, ஆற்றலும் அழகும் அமைந்த படைப்புக்கள் யதார்த்தமான சமுதாய நிகழ்வுகளைப் பற்றுக்கோடாய்க் கொண்டே முகிழ்க்கின்றமை தெளிவாகும்.
இத்தொகுதியிலுள்ள நாடகங்களுக்கும் இவ்வடிப்படை உண்மை பொருந்தும்
. கடூழியம், 
காலம் சிவக்கிறது
 என்பனவும் சு
ந்தரலிங்கத்தின் விழிப்பு
, அபசுரம் முதலியனவும் நம் நாட்டின் அரசியல் வரலாற்றின் சில காலகட்டங்களையும் மையமாகக்கொண்டு விரிந்த கற்பனைகளேயாம். 
நாடகப் பெயர்களே குறியீட்டுப் பொருள்மையில் அமைந்து,
 "ஒரே சமயத்தில் பல வேறு தளங்களிலும் சென்று பொருள் பயக்கும் பண்பு" உடையனவாயிருத்தலும் கவனிக்கத் தக்கதே
. பாராளுமன்ற அரசியலின் போலித்தன்மை 
கட்சி முறைகளின் வறுமை, 
வர்க்க முரண்பாடுகளின் உண்மை,
 போராட்டங்களின் இன்றியமையாமை என்பன இந்நாடகங்கள் உணர்த்தும் மெய்ப்பொருள்கள்
, பருப்பொருளான பௌதிக சம்பவங்களே கருத்துரவான நாடகங்களுக்கு அடித்தளமாயுள்ளன
. உறுதிபயக்கும் பொருள் தனக்குகத்த உருவத்தைப் பெறும்பொழுதே அழகியல் உடன் பிறக்கிறது.
 இவ்வடிப்படை நியதியை உணராமல், "அழகியல்" நாடகங்களைத்தேடி உளவியல் விகாரங்களையும், அந்நியமயப்பட்ட அதீத தனிமனிதவாத அவலச்சித்திரங்களையும், பேதலித்த மாந்தரின் பித்தலாட்டங்களையும் நவீனத்துவத்தின் பெயரில் மேடையேற்றி அவற்றை நாடகக்கொடுமுடிகளாகப் பிரசாரஞ்செய்வோர், உண்மையில் கனியிருக்கக் காய்கவர்வோராவர்
. அதுமட்டுமன்று. கலையழகும் கருத்துயர்வும் நிறைந்த பிறமொழி நாடகங்களை மேடையேற்றுவதையே பிரதான கலை முயற்சியாகக் கடைப்பிடிப்போர், நாளடைவில் தம்மையறியாமலே (சில வேளைகளிலே பிரக்ஞைபூர்வமாகவே) 'அதி நவீன' நாடகங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்குகின்றனர்.
 மேலைநாட்டு அலைகளினால் அள்ளுப்பட்டு அல்லது அதற்குச் சமமாகக் கருதப்படும் இந்தியப் போலிகளால் ஈர்க்கப்பட்டு, இறுதியில் அவர்கள் கருதியோ கருதாமலோ 'தூய' கலைவாதத்தில் சிக்கிக்கொள்கின்றனர். 
மூன்றாவது உலக நாடுகளில் இத்தகைய நிகழ்வுகளைக் காண்கிறோம். 
உயர்கலையின் பெயரால் முதலிலே பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் காலக்கிரமத்தில் இவை ஐயத்துக்கிடமின்றி வணிகநோக்கில் சென்று முடிவடைவதையும் காணலாம். 
அல்லது 'கலை கலைக்காகவே' என்ற எதிர்ப்புரட்சி நிலைக்குத் தள்ளப் படுவதையும் காணலாம்.
 "இரவல் மனப்பான்மையும் மேற்குமய மோகமும்" என்ற கட்டுரையில் முருகையன் இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார், ஒருகூற்று இவ்விடத்தில் பொருத்தமாயிருக்கும். 
மேற்கு மய மோகத்துடன் கலை இலக்கியப் படைப்புக்களை ஆக்குபவர்களின் தன்மைகளை விபரித்துவிட்டுப் பின்வருமாறுகூறுகிறார். 
"இவ்வாறு செய்வதனால், உண்மையான வாழ்க்கையின் உருப்படியான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்காது விலகம் ஒரு போக்கினை இவர்கள் வளர்க்கிறார்கள். வேறொரு வகையிற் சொன்னால், வர்க்க உணர்வை இவர்கள் மழுக்குகிறார்கள்." முக்கியமான பொருளை எளிமையாகக் கூறிவிடும் இக்கூற்றுக்கு மேலும் விளக்கம் தேவையில்லை.
பல்கலைக்கழகத்திலே இலக்கியக் கல்வியைப் புகட்டுவன் என்ற வகையில் இந்நூல் வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 
இலங்கைத் தமிழிலக்கியம் கடந்தசில வருடங்களாக நமது பல்கலைக்கழகங்களிலே பாடநெறியின் பகுதியாக உள்ளது. கவிதை, சிறுகதை, கட்டுரை முதலிய இலக்கியப் பிரிவுகளுக்கு உதாரணவிளக்கங்களாகச் சிலபல நூல்களை வெளிவந்திருப்பினும் நாடக இலக்கிய நூல்கள் அருந்தலாகவே இருந்து வந்திருக்கின்றன. 
கணபதிப்பிள்ளை அவர்களின் நூல்களும் தற்சமயம் கிடைப்பது அரிது. 
இந்நிலையில் மஹாகவியின் நாடகங்களும்,
 ஆறு நாடகங்கள் என்னும் தொகுதியும் இத்தொகுதியும்,
 வேறு சிலவும் மாணாக்கருக்கும் போதனாசிரியருக்கும் வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன.
 ஆறுநாடகங்கள், 
நாடகம் நான்கு
 என்னும் இருவருட தொகுதிகளிலும் வகைமாதிரிக்குப் பொருத்தமான நாடகங்கள் இடம்பெற்றிருப்பதும் சிறப்பான அம்சமாகும். 
கடந்தபதினைந்து நாடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகங்கள் மேற்கூறிய இரு தொகுதிகளிலும் உள்ளன என்று துணிந்து கூறிவிடலாம்.
 இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொதுவாகவும், நாடக வரலாற்றைச் சிறப்பாகவும் ஆராய விரும்புவோர்க்கு இந்நாடக நூல்கள் இன்றியமையா மூலாதாரங்கள் என்பதும் கூறாமலே பெறப்படும்.
இறுதியாக இந்நாடகங்களை இயற்றிய ஆசிரியர்களைப்பற்றி சில வார்த்தைகள் கூறுதல் அவசியம்
. ஏலவே நான் கூறியது போல இவர்கள் அனைவருமே நாடறிந்த எழுத்தாளர்கள்
. சொல்லைப் பிசைந்து கவியாக்கி அமுதம் படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்
. அத்துடன் நாடகத்தை ஏட்டிலுள்ள இலக்கியமாக மாத்திரம் நோக்கது, அதனை அரங்கப் படைப்பாகவும் அறிந்தவர்கள்;
 நடிப்பாற்றல்,
 பாவனை வளம், 
ஒப்பனை, 
ஒளி-ஒலி அமைப்பு, 
மேடை அமைப்பு, 
நெறியாள்கை முதலிய துறைகளிலெல்லாம் அநுபவமுள்ளவர்கள்
; அவற்றைப் பிறமொழி நாடகங்கள் மூலம் இரவல் பெற்றவர்கள் அல்லர்.
 சுய ஆக்கங்களோடு மல்லாடித் தனித்துவமான நெறிமுறைகளையும் உத்திகளையும் வகுத்துக்கொண்டவர்கள்
. இவர்களைப்போலவே யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் நாடக அரங்கக் கல்லூரியினரும் இலங்கைத் தமிழ்நாடக மரபு விருத்திக்கு அரும்பாடுபட்டு வருகின்றனர். 
அறுபதுகளின் பிற்கூற்றில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரும்பி, எழுபதுகளில் முகைதிறந்த நாடகப் புத்தாக மலர் இப்பொழுது மலர்ச்சியடைந்துள்ளது எனலாம். 
குகராஜா, 
சண்முகலிங்கம்

தாசீசியஸ் 
போன்றோர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கிற்குப் புதிய பரிமாணங்களை அளித்துள்ளனர்.
இக்காலகட்டத் தில் 
நெல்லியடி, 
பண்டத்தரிப்பு, 
இளவாலை 
முதலிய கிராமங்களில் இளங்கலைஞர்கள் தயாரித்த நாடகங்களும் நமது கவனத்திற்கு உரியன.
 குறிப்பாகக் காலைக்கவிஞனின் 
காகிதப்புலிகள் (1975) 
காத்திரமான சமூக உள்ளடக்கத்துடனும், தத்துவார்த்தத் தெளிவுடனும் எழுதப்பட்ட நாடகமாகும்
. இறுதியாய்வில், இத்தொகுதியின் சிறப்பியல்பு என்னவெனில், சமுதாயமாற்றத்துக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய கலையுணர்வு நிரம்பிய படைப்புகளைச் சுவைஞர்களுக்கு அளிப்பதாகும். '
உலகிதை மாற்றி ஒர் உன்னதமாகிய கற்பனையின் பொலிவினை'
 நாடகத்திற் பொறித்த பெருமை இந்நாடக ஆசிரியர்களுக்குண்டு
, இவர்களைத் தக்கமுறையில் பாராட்டுவதோடு இவர்களுக்கு வேண்டிய ஊக்கத்தை அளித்தல் நமது கடமையாகும்
. முருகையனிடம் கையெழுத்துப் பிரதியாகவுள்ள
 'அப்பரும் சுப்பரும்' 
என்ற நாடகம் மேடையேற்றப்பட வேண்டும், 
நூலுருவிலும் வெளிவரல் வேண்டும். அதைப்போலவே
 மௌனகுரு, 
சிவானந்தன்
, சுந்தரலிங்கம் 
முதலியோரின் ஏனைய ஆக்கங்களும் நூலுருப்பெறுதல் அவசியம். 
"இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களின் தேசியத் தனித்துவத்தை நாடகம் என்னும் கலை வடிவம் மூலம் உணர்த்துவதில் கடந்த சில ஆண்டுகளாக முழுமூச்சாக ஈடுபட்டு வந்திருக்கும் இக்கலைஞர்கள் உற்சாகம் குன்றாது தொடர்ந்தியங்குவதற்கு நாடகாபிமானிகள் ஆவன செய்தல் வேண்டும்

இந்நூல் அதற்குரிய ஆதரவையும் பாராட்டையும் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
க.கைலாசபதி
1980-05-01
இராச வீதி
திருநெல்வேலி கிழக்கு
யாழ்ப்பாணம்
 

 

Leave a Reply