• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளது

இலங்கை

இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரத பாதைகளில் 37 ரயில்கள் தடம்புரண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது என்று ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புகையிரதப் பாதையில் பயன்படுத்தப்படும் தண்டவாளங்கள் துருப்பிடித்து அழுகிப் போவதினால் தடம் புரளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரையில் புகையிரதப் பாதைகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பத்தாயிரம் தண்டவாளங்களை ரயில்வே திணைக்களம் பெற்றுள்ளதுடன், மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையிலான நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில்வே பிரிவில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தண்டவாளங்கள் அகற்றப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை, இவ்வருட காலப்பகுதியில் புகையிரத கடவைகளில் பயன்படுத்தப்பட்ட 346 பாதுகாப்பு கடவைகள் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவைகளை கடந்து செல்லும் சாரதிகள் கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply