• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமன்னாவுக்கு விரைவில் திருமணம்

சினிமா

கடந்த 2005 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. அதனை அடுத்து இவர் நடித்த கல்லூரி என்ற திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். தற்போது தமன்னாவுக்கு தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
  
தமன்னா விஜய் வர்மா நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

மேலும் திருமணத்திற்கு பின்பு தமன்னா சினிமாவில் இருந்து விலகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. 
 

Leave a Reply