• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜிக்காக வாலி எழுதிய தரமான பாடல் - கண்ணதாசனுக்கு ஏற்பட்ட குழப்பம்

சினிமா

சினிமாவில் வாலிக்கு முன்பே வந்துவிட்ட கண்ணதாசன், பல ஹிட் பாடல்களை கொடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் சினிமாவில் நுழைந்தவர்தான வாலி.

சினிமாவில் கவிஞர்களாக எதிர் எதிர் துருவங்களில் இருந்தாலும் கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசன் இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நெருங்கிய நட்புடன் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

சினிமாவில் வாலிக்கு முன்பே வந்துவிட்ட கண்ணதாசன், பல ஹிட் பாடல்களை கொடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் சினிமாவில் நுழைந்தவர்தான வாலி. என்னதான் கண்ணதாசனுக்கு போட்டியாக பாடல் எழுத சினிமாவிற்கு வந்தாலும், முதன் முதலில் அவரை சந்தித்த வாலி, ஒரு கவிதையை சொல்லி கண்ணதாசனின் மனதை கவர்ந்துள்ளார். அன்றில் இருந்து இருவரும் நெருங்கிய நட்புடன்இருந்துள்ளனர்.

அதே சமயம் சினிமாவில் இருவரும் எதிர் எதிர் துருவங்கள் தான். ஒரு படத்தில் கண்ணதாசன் 3 பாடல் எழுதினால் வாலி 3 பாடல்கள் எழுதுவார். இந்த மாதிரியான நிலையில், 1967-ம் ஆண்டு சிவாஜி நடிக்கும் ஒரு படத்திற்கு எம்.எஸ்.விஸவநாதன் இசையமைத்துள்ளார். அப்போது அங்கு வேறு ஒரு பாடத்திற்காக பாடல் எழுத கண்ணதாசன் வருகிறார். அந்த நேரத்தில் பாடல் ஒன்று ஒளித்துக்கொண்டிருக்கிறது.

இதை கேட்டு மெய்மறந்து போன கண்ணதாசன், இது நாம் எழுதிய பாடல் தான் ஆனால் எந்த படத்திற்கு என்று தெரியவில்லையே என்று நினைத்து, எம்.எஸ்.வியிடம் சென்று விசு இந்த பாடலை நான் எந்த படத்திற்காக எழுதினேன் என்று கேட்க, அவரோ சிரித்துக்கொண்டே அண்ணே இது நீங்கள் எழுதிய பாடல் அல்ல, கவிஞர் வாலி எழுதிய பாடல் என்று சொல்ல, இதை நம்பாத கண்ணதாசன் விளையாடாத விசு உண்மையை சொல் என்று சொல்கிறார்.

மீண்டும் எம்.எஸ்.வி. கவிஞர் வாலிதான் பாடலை எழுதினார் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு சந்தேகம் என்றால் வாலியிடமே போன் செய்து கேளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி கண்ணதாசன் போன் செய்து கேட்க, வாலி ஆமா அண்ணே நான் தான் அந்த பாடலை எழுதினேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் உணர்ச்சி மிகுதியில் வாலியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர் விரும்பி சாப்பிடும் மதுபான பாட்டிலை பரிசாக கொடுத்துள்ளார்.

1967-ம் ஆண்டு சிவாஜி பத்மினி இணைந்து நடித்த இரு மலர்கள் என்ற படத்தில் இடம்பெற்ற மாதவி பொன் மயிலா என்ற பாடல் தான் கண்ணதாசனை குழப்பிய அந்த பாடல். இந்த படத்த ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் 

Leave a Reply