• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின் கட்டண திருத்தம் - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கை

நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியுமாக இருந்தால், அடுத்த மின் கட்டண திருத்தத்தின்போது பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தேசிய உற்பத்தியில் 52 வீத மின்சாரம், நீரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையினை தொடர்ந்தும் பேண முடியுமாக இருந்தால், அடுத்த மின் கட்டண திருத்தத்தின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

78 வீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து உற்பத்தி செய்யப்பட நிலையில், தற்போது நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 1000 ஜிகாவோர்டிற்கு அதிகளவான மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
 

Leave a Reply