• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கை

தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாக்கம் காரணமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

அந்தவகையில்  கடந்த சிலநாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மன்னார் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தாழ்நில கிராமங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் பட்சத்தில் தாழ்நில கிராம மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply