• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பட்ஜெட்டில் வாகன இறக்குமதிக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை

இலங்கை

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் கையிருப்பு ஓரளவு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதன்படி, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்த போதிலும் தமக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் 400,000 இற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் அல்லது கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a Reply