• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறக்கப்பட்ட வரலாறு……

இலங்கை

நூற்றாண்டு விழா காணப்போகும் இலங்கை வானொலியின் வரலாற்றிலே,  1950ம் ஆண்டு September 30 அன்று ஆரம்பமான வர்த்தக ஒலிபரப்பில் தமிழில் பணியாற்றிய ஆரம்பகால அறிவிப்பாளர்களில், Dan துரைராஜ், Christy கந்தையா, Justin ராஜ்குமார், S.P.மயில்வாகணன் என்ற வரிசையில் A.L.Saleem என்ற பெயரை மட்டும் காலம் மறந்து விட்டது. 
அடியேன் அறிவிப்பாளராக இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் வானொலி நிலையத்தைப் பார்வையிடத் தன் குடும்பத்தாரை அழைத்து வந்திருந்த அவர், ‘உங்களுக்கு முன்பே ஒரு அறிவிப்பாளராக இந்த ஒலிவாங்கி முன்பு இருந்து நான் பணியாற்றியுள்ளேன் தெரியுமா?’ என்று கேட்டவர், ஆனால் இப்போது நான் உங்களது ரசிகனாக வந்துள்ளேன் என்று தன்னடக்கத்துடன் சொன்னபோது,
‘அடுத்து வரும் தலைமுறையையும் வாழ்த்தி வரவேற்கும்’ பெருந்தன்மை மிகு ஒலிபரப்பாளர்களது அடிச்சுவட்டில் அல்லவா நாம் இணந்துள்ளோம், என்று உணர்ந்து உள்ளம் பூரித்தது, இந்தப் பண்பினை நாமும் பின்பற்றவேண்டும் என உள்ளம் உணர்த்தியது. 
அதன் பிறகு அவரை சந்திக்க வாப்புக் கிடைக்கவே இல்லை. 

இன்று, என்மீது பேரன்பு கொண்ட ரசிகையாக ‘கெலிஓய’ எனுமிடத்தில் இருந்து வந்து சந்தித்த ஆசிரியை, அமீனா அவர்கள் தனது தாயாரின் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த மூத்த அறிவிப்பாளர் சலீம், ஐந்தாண்டுகளுக்கு முன் காலமானார்  என்றும் கூறி, அவரது நிழற்படங்களையும் ஒப்படைத்தார். 
பார்க்கப் பரவசமாயிருந்தது. சகோதரி அமீனா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. 
இந்நிழல் படங்களில்- A.L.Saleem அவர்கள் அந்நாளைய பெரிய ஒலிவாங்கியின் முன்னால் அமர்ந்து பணியாற்றுவதையும், வர்த்தக ஒலிபரப்பின் பிதாமகர் S.P.மயில்வாகணன் அமர்ந்திருக்க இடது கோடியில் முதலாவதாக A.L.Saleem அவர்கள் நின்றுகொண்டிருப்பதையும் காணலாம்.

B.H. Abdul Hameed

Leave a Reply