• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருள் கையிருப்பில் இல்லை

இலங்கை

”எரிபொருள் கையிருப்பில் இல்லை” என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள  நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் கோப் குழுவானது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட  பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கோப் குழு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”   கனியவள கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லை. நாட்டில் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கு 60,000 மெட்ரிக் தொன்  டீசலும், 45 ,000 மெட்ரிக் தொன்  பெற்றோலுமே  கையிருப்பிலுள்ளது ” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply