• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் - அமைச்சர் நளின் பெர்னாண்டோ

இலங்கை

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நலின் பெர்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக எமக்கு உள்ள பிரதான வருமான வழியான வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

அந்த வகையில் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது. இதன் ஊடாக நாட்டில் சீனியின் விலை அதிகரிக்கப்படுமாயின் அதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். எனவே அதனைத் தடுப்பதற்காக சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி, அந்த உற்பத்திகளில் நாட்டினுள் விநியோகிக்க எதிர்பார்க்கும் அளவு, அடுத்த வருடத்தில் அவற்றின் விலைகள் தொடர்பில் எமக்கு அறிக்கையளிக்குமாறு நாம் அமைச்சுக்களுக்கு அறிவித்துள்ளோம்.

இதன் ஊடாக நாட்டில் உணவுப் பாதுகாப்பை எவ்வளவு தூரம் எம்மால் பேணமுடியும் என்றும் அடுத்த வருடத்தில் எவ்வாறு விலைகளைக் கட்டுப்படுத்தலாம் என்றும் விலைகள் குறித்து எமக்கு ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்.

இதன் மூலம் அடுத்த வருடத்தில் நாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, அதன் விலைகள் குறித்தும் நுகர்வோருக்கு உத்தரவாதம் ஒன்றை வழங்கவும் எம்மால் முடியும்.

சில நேரம் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படுமாயின் இறக்குமதி செய்தேனும் அப்பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply