• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - சஜித் பிரேமதாச

இலங்கை

ஆளும் – எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நேற்று நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது முக்கியமானதொரு நடவடிக்கையாகும். இதற்காக நான் அனைத்து தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும், இது ஒரு அடையாள நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இது சட்டமாக கருதப்படாது.

ஆனால், இந்த கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதில் அனைவரும் உறுதியாகவே உள்ளோம்.
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இவ்வேளையில் நான் ஒரு அழைப்பு விடுக்கிறேன். கிரிக்கெட் சபைக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்தது போல, நீதிமன்றத்தின் இந்த செயற்பாடுக்கு எதிராகவும் ஆளும்- எதிரணியினர் ஒன்றிணைந்து அரசமைப்புக்கு இணங்க, சட்டரீதியான ஒரு நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்.

சித்ரிசிறி அறிக்கைகள், குசலா சரோஜினி அறிக்கை, கணக்காய்வாளரின் அறிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.

கணக்காய்வாளரின் இந்த அறிக்கை தொடர்பாக சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றம் வலியுறுத்த வேண்டும்” என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply