• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விழித்தெழு பெண்ணே

கனடா

கனடா' விழித்தெழு பெண்ணே' சர்வதேச பெண்கள் அமைப்பு' அமைப்பு நடத்திய தாயக வீணைக் கலைஞமர் வாகீசனின் இனிய கச்சேரி

கடந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி ஸ்கபாபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் கனடா' விழித்தெழு பெண்ணே' சர்வதேச பெண்கள் அமைப்பு' அமைப்பு நடத்திய தாயக வீணைக் கலைஞமர் வாகீசனின் இனிய கச்சேரி சிறப்பாகவும் மண்டபம் நிறைந்த ரசிகர்கள் மத்தியிலும்  அரங்கேறியது.
விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன் அவர்கள் இதற்குரிய ஏற்பாடுகளை தனது குழுவினரோடு இணைந்து நடத்தியிருந்தார்.
மேற்படி  நமது தாயகத்தின் வீணைக் கலைஞர் வாகீசனுக்கு பக்கவாத்திய இசை வழங்க அரவிந்தன் தலைமையிலான  'மெகா ரியுனர்ஸ்' இசைக்குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

இங்கே காணப்படும் படங்களில் கலைஞர் வாகீசன் மற்றும் இலங்கையிலிருந்து சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்ட உமாச்சந்திர பிரகாஸ் ஆகியோரை உதயன் லோகேந்திரலிங்கம் அரசு சார்ந்த சான்றிதழ்களை வழங்கி கௌரவிப்பதையும்.  பிரதம விருந்தினர் வீணை வித்துவான் தனதேவி மித்ரதேவா அவர்களை சசிகலா நரேன்  மற்றும் 'மெகா ரியுனர்ஸ்' அரவிந்தன் அவர்களை திருவாளர்கள் குலா செல்லத்துரை -சங்கர் நல்லதம்பி மற்றும் திருமதி சசிகலா நரேன் ஆகியோர் கௌரவிப்பதையும். வர்த்தகப் பிரமுகர் கிருஸ்ணகோபால் கலைஞர் வாகீசன் அவர்களுக்கு தங்க மோதிரம் ஒன்றை அணிவிப்பதையும் காணலாம்.
---நன்றி புகைப்படங்கள் ;- ஐயா4யு-
 

 

Leave a Reply