• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜிகர்தண்டா டபுள் X படத்தின் முதல் விமர்சனம்

சினிமா

கார்த்திக் சுப்பாராஜ் கேரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் ஜிகர்தண்டா. அதன் அடுத்த பாகம் ஜிகர்தண்டா டபுள் X என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ரகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து இருக்கும் அந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (10 நவம்பர் 2023) வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ஜிகர்தண்டா டபுள் X படத்தை முழுதாக பார்த்துவிட்டாராம். அவர் படத்தின் முதல் விமர்சனத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

படத்தின் கடைசி 40 நிமிடங்கள் அதிகம் சிறப்பாக இருக்கிறது என கூறி இருக்கிறார் தனுஷ். 

"ஜிகர்தண்டா டபுள் X படம் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து அற்புதமான படைப்பு. வழக்கம் போல எஸ்.ஜே.சூர்யா Amazing. ராகவா லாரன்ஸ் ஒரு performer ஆக revelation" என அவர் பதிவிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply