• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை 12வது ஆண்டாக முல்லைத்தீவு  அன்பு இல்லக் குழந்தைகளுக்காக நடாத்தும் ஊட்டும்கரங்கள் நிகழ்வு

இலங்கை

கடந்த 28 ஒக்டோபர் 2023 சனிக்கிழமை ஸ்காபரோவில் அமைந்துள்ள  Armenian Centre இல்  சிறப்பாக நடைபெற்றது. .
விழா சரியாக 6.30 நிமிடத்துக்கு விழா அறிவிப்பாளர் திரு ஞானபண்டிதரின்   சுந்தரத் தமிழோடு - திருமதி யசோதரா பரமேஸ்வரன், திருமதி  சாருமதி மனோ காந்தன் திருமதி மணி திருவருட்செல்வன் (ராசன்) திருமதி சண்முகவடிவு பாலகுமாரன் திருமதி ரதி உதயகுமார் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி விழாவினை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தனர். 
அதனைத் தொடர்ந்து செல்வி அலனி ரவிச்சந்திரன் அவர்களால் தேவாரம் பாடப் பட்டது.   கனடிய தேசிய கீதம் செல்வி தாமிரா சங்கர் அவர்களாலும் தமிழ் ஈழத்தில் உருவான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திரு உமைமாறன் சடையப்பசாமி அவர்களாலும் பாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருமதி தாட்சாயினி பிறின்ஸ் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. 
விழாவின் சிறப்பு விருந்தினராக 2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக் கொடிய யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களைக் காப்பாற்றியவரும் போரில் காயமடைந்தும் இராணுவ முகாம்களில் மாதக்கணக்கில் தடுத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளானவருமான டாக்டர் வரதராஜா அவர்கள் கலந்து கொண்டார். அவர் மேடைக்கு வரும் போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பலத்த கை தட்டி வரவேற்றனர். 
அவர் தனது உரையில் இந்த அரங்கில் முல்லைத்தீவு  அன்பு இல்லம்... என்பதைக் காணுகின்ற போது கனடாவில் எமது தேசியத் தலைவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கப்படுவதை நினைத்துப் பெருமை கொள்ளுகின்றேன். அன்பு இல்லம், பாரதி இல்லம், செஞ்சோலை இல்லம் தலைவரால் உருவாக்கப்பட்டது. அவருக்கு எத்தனை பாரிய வேலைகள், சுமைகள் இருந்தாலும் மாதத்தில் சில நாட்களை அந்தக் குழந்தைகளோடு செலவு செய்வதை நான் அவதானித்துள்ளேன். அவரது கனவு நனவாக பாடுபட்டு வரும் ஈழநாடு பத்திரிகைக்கு எனது பாராட்டுக்கள், உங்கள் ஆதரவு இந்தக் குழந்தைகளை வாழ வைக்கும் என்று தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து கனடா மண்ணில் சமுக சமயப் பணியாற்றி வரும் கனடா ஸ்ரீஐயப்பன் இந்து ஆலய குருசாமி சிவத் திரு சுப்பிரமணியம் நாகலிங்கம் அவர்களும், சமுகப்பணி, ஊர்ப்பணி என்பதோடு ஒரு மானிடனின் இறுதி நிகழ்வில் அவரின் குடும்ப உறுப் பினராகவே மாறி அந்திமச் சடங்குகளை எந்தவித பாகுபாடும் இன்றி ஒழுங்குபடுத்தி எந்தவித பிரதி உப காரத்தையும் எதிர்பாராமல் செய்து வரும் திரு சோம. சச்சிதானந்தன் அவர்களும் கனடா மண்ணில் 25 ஆண்டுகளாக இசைப் பணியாற்றி வரும் மெகா ரினஸ் இசைக்குழுவின் தலைவர் அன்புக்குரிய அரவிந்தன் மகேசன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 
தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த பின்னணிப் பாடகர் முகேஷ் பின்னணிப் பாடகி சுர்முகி கனடித் தமிழ் பாடகர்கள் சபேசன், ரம்மியா, சரிகா ஆகியோரின் இன்னிசை மாலை சிறப்பாகப் பாடப்பட்டது. பழைய புதிய பாடல்களுடன் அரங்கில் இருந்தவர்களின் விருப் பப் பாடலையும் பாடி மகிழ்வித்தனர். 
அத்துடன் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் கனடாவின் பெயரில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கான காசோலையை அரங்க த்தில் வைத்து ஈழநாடு பத்திரிகை ஆசிரியரிடம் வழங்கினார்கள். 
இவ்வாண்டு நிகழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை மகிழ்ச்சியோடு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக அரங்கம் மற்றும் ஒலி ஒளி அமைப்புக்கான செலவு 12,640.00வை கனடா வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிறந்த சமூகப் பணியாளரு மான திரு சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் தானாக முன் வந்து ஏற்றுக் கொண்டார். அதே போன்று சிற்றுண்டி மற்றும் சிறப்பு உணவுகளை வழங்கிய நந்தா கேற்ரறிங் உரிமையாளர் திரு.ருபன் அவர்கள் அதற்கான 5000.00 டொலர்களை தனது பொறுப்பாக ஏற்றுக் கொண்டதோடு வருடா வருடம் அன்பு இல்லக் குழந்தைகளுக்கான இது போன்ற தனது செயற்பாடு தொடரும் என்று உறுதியாகத் தெரிவித்தார். 
அதேபோன்று தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பாடகர்களின் தங்குமிடம் உணவு மற்றும் வாகனப் போக்குவரத்துச் செலவுகள் 3500.00 டொலர்களை தமிழ் மக்கள் பணியாற்றி வரும் சமூக சேவையாளர் திரு சங்கர் நல்லதம்பி (ஹோட்டல் சங்கர்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அரங்கத்தில் அதிஷ்ட லாபச்சீட்டு மூலம் வெற்றி பெற்றவருக்கான லாப்டொப் இனை ரொக்ஸ்சோஸ் மோகன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கி இருந்தார். அதேபோன்று ஏலத்தில் விடப்பட்ட தங்கச் சங்கிலியை அம்மா தங்க நகை அடைவு மாடத்தின் உரிமையாள ரும் எமது நிகழ்வுக்கு அனுசரனையும் ஆலோசனையும் வழங்கி வருகின்ற திரு கிருஷ்ணகோபால் அவர்களும் விலை உயர்ந்த புடவையை பிரபல புடவை வியாபார  நிலையமான ஆலயாஸ் நிறுவன உரிமை யாளர் திரு மஞ்சுதன் அவர்களும் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
இவர்கள் மட்டுமல்ல சிறந்த நோக்கத்திற்காக நடத்தப்படும் நிகழ்வுக்கு அனுசரனை வழங்கிய அனைத்து வர்த்தகத்துறை நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 
என் இனிய வாசகர்களே! உறவுகளே! 
இவர்களது வர்த்தகத்தை நாம் ஆதரிப்போராக இருக்க வேண்டும். அவர்களது தொழில்துறைகள் வளர்ச்சி அடைந்தால் மென்மேலும் அவர்களது உதவிகள் நமது சமூகத்திற்கு பயன்படும் என்பதை மறவாதீர்கள். 
மீண்டும் 2024 செப்டம்பர் மாதம் ஓர் ஊட்டும்கரங்கள் நிகழ்வில் சந்திப்போமாக. நன்றியுடன் பரமேஸ் - ஆசிரியர் ஈழநாடு
 

Leave a Reply