• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை

சினிமா

"ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை" "கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி " - போன்ற மண் மணம் கமழும் திரைப்படப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் திரைக்கவித் திலகம் மருதகாசி  நினைவு நாள் இன்று (நவம்பர் 29, 1989) . திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்த தவறாத கவிஞர் மருதகாசி.

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கினார்.
 

Leave a Reply