• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க எச்சரிக்கை

இலங்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், மரங்களுக்கு அடியில் செல்லாமல் இருக்கவும், இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகளான நெல் வயல், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி நீர் நிலைகளை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மேலும் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அவசர உதவிக்கு, பொதுமக்கள் உள்ளூர் பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply