• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவின் செயலால் கடும் கோபத்தில் கனடா

கனேடிய இராணுவ ஹெலிகாப்டருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனப் போர் விமானம் பறந்தது கனடாவின் கோபத்தைத் தூண்டியுள்ளது. கனடாவின் HMCS Ottawa இராணுவத்திற்கு சொந்தமான CH-148 Cyclone ஹெலிகாப்டருக்கு முன்னால் சீனாவின் J-11s போர் விமானம் ஆபத்தான முறையில் பறந்தது ஆத்திரமூட்டலைத் தூண்டியதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை (Department of National Defence) தெரிவித்துள்ளது.
  
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலில் Paracel தீவுக்கு அருகில் சர்வதேச எல்லையில் பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் மீது சீன விமானம் சுட்டதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அதே ஹெலிகாப்டரை சீன போர் விமானம் தக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து தனது கவலையை சீனாவிடம் தெரிவிப்பதாகவும் பிளேயர் கூறினார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு சம்பவம் இது என்றும் அவர் கூறினார்.

சீன விமானப்படையின் ஆபத்தான இந்த நடத்தை இரண்டாவது முறையாக நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு சீன ஜெட் விமானம் ஐநா பணியின் ஒரு பகுதியாக இயங்கிய கனடாவின் கண்காணிப்பு விமானம் ஒன்றின் 16 அடிக்குள் வந்ததாக, பிளேயர் கூறினார். 
 

Leave a Reply