• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமாவை இங்கு சில கதாநாயகர்கள் வேறு கண்ணோட்டத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

சினிமா

சினிமாவை இங்கு சில கதாநாயகர்கள் வேறு கண்ணோட்டத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர் மட்டும் அதிலிருந்து தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
நடிகர் #Thala அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் தலைப்பில் புதிய படத்தில் நடித்துவருவதும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பதும்.‌ சில நாட்களுக்கு முன் பேசுபொருள் ஆனது. இப் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்தவர்தான் மிலன் என்பவர். இவர் மாரடைப்பு காரணமாக அந்நாட்டில் இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.

நடிகர் #தல அஜித்குமார் மிலனின் உடலை சென்னைக்கு கொண்டு வர, அவரது குடும்பத்தினருக்கு வாக்குறுதி தந்தபடி, அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளார்.
நடிகர் #Thala அஜித்குமாரை பற்றி மக்களிடம் கேட்டால், பத்தில் எட்டுபேர் நல்ல மனுசன் என்பார்கள். அதுதான் இங்கு அஜித்குமார் சம்பாரித்த ஆகச் சிறந்த சொத்து.
இந்த சம்பவம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, உயிரிழந்த மிலனின் மனைவியை #Thala அஜித்குமார் தன் படத்திற்கு கலை இயக்குனராக அமர்த்திய கையோடு, ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் சிறப்பு மருத்துவ முகாமும் அமைத்து, தனது ‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க‌ ஏற்பாடுகளை செய்திருக்கிறார் இந்த #Thala அஜித்குமார் எனும் மனிதன்!
ஆம், நிஜ கதாநாயகன் களத்தில் இருக்கிறான். சிலர்போல் திரையில் மட்டும் இல்லை.

Leave a Reply