• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தில் சுவாரசிய விடயங்கள் மற்றும் பலரும் அறியாத தகவல்கள்

சினிமா

படத்தில் முத்த காட்சி இருக்கும், அதனால் தான் தமிழ் சமுதாயம் கெட்டுப்போய்விட்டது என்று கதறுவோர் நிறைய உண்டு... அரசியல்வியாதி கிருஷ்ணசாமி முதல், இன்று சைமனின் தம்பிகள் வரை இந்த தனிமனித விமர்சனம் தொடர்கிறது...
அவரது படங்களில் நான் கண்டவை இவை:
1. தேவைப்படாமல் கமல் படத்தில் புகைக்கும் காட்சி இருக்காது. முக்கியமாக உச்ச நடிகர் போல போஸ்டர்களில் பீடி, சிகரெட், சுருட்டு பிடிப்பது போல இருக்காது.

2. கதைக்கு தேவையில்லாமல் கமல் படங்களில் குடிக்கும் காட்சிகளோ, டாஸ்மாக் பார் போன்ற காட்சிகளோ இடம்பெறுவது இல்லை ஒரு சில தவிர்க்க முடியாத படங்களில் அக்காட்சிகள் இருக்கும். அவை படத்தின் அடிப்படை தேவை (உதாரணம் - வாழ்வே மாயம், விருமாண்டி)
3. எவ்வளவு தான் பகுத்தறிவு பேசினாலும், கமலை பொறுத்தவரை அந்த படத்தில் அதுவொரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன குணாதிசியமோ, அதை தான் செய்வார். 
உதாரணம், 
தசாவதாரத்தில் 
ரங்கராஜ நம்பியாக வைணவம் பேசுவார்,
அன்பே சிவத்தில்  நல்லசிவமாக கம்யூனிசம் பேசுவார், உன்னால் முடியும் தம்பியில் சத்தியமூர்த்தியாக  வியாக்கியானம் பேசுவார். 
4. கமல் படங்களில் நடிகைகளுக்கு வந்தோம், போனோம், பாட்டுக்கு நடனம் ஆடினோம் என்று பாத்திர படைப்பு இருக்காது. அவர்களுக்கு என்று சிறிய நடிக்க வாய்ப்பும் இருக்கும். உதாரணம் - தேவர் மகன் - ரேவதி, விருமாண்டி - அபிராமி, நாயகன் - சரண்யா, பம்மல் கே சம்பந்தம் - சிம்ரன், வசூல் ராஜா - ஸ்னேகா, மூன்றாம் பிறை - ஶ்ரீதேவி
இவர்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் இன்று வரை நம் மனதை விட்டு மறையாத குணாவின் அபிராமி ரோஷினி. 
5. கமல் படங்களில் பெரும்பாலும் பெண்களை கீழ்த்தரமாக பேசுவதோ, அவர்களை பின்தொடர்ந்து விசில் அடித்து, காதல் செய்ய நிர்பந்திப்பது போன்ற காட்சிகள் இருப்பதில்லை .
6. கமல் படங்களில் இருக்கும் நம்பகத்தன்மை. 
உதாரணம் - விருமாண்டியில் நாயக்கர்கள், தேவர்கள் வீடுகள், அவர்களது வட்டார மொழி போன்றவை. மைக்கேல் மதன காம ராஜனில் வரும் காமேசுவரன் உடல்மொழி, உச்சரிப்பு, போன்றவை. விஸ்வரூபம் தமிழ் பேசும் இசுலாமிய தோற்றம், இறைவனுக்கு பயன்படுத்தல் போன்றவை...
7. கமல் படங்களில் இருக்கும் நேர்மை. இது தவறு, இது சரி என்று வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்று கதைப்போக்கில் சொல்வது.
8. அந்தந்த காலங்களுக்கு ஏற்ப படம் கொடுத்தது. 
வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்தபோது வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா போன்ற படங்கள்; நிதி நிறுவனங்கள் மோசடி சமயத்தில் மகாநதி, தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது குருதிப்புனல், விஸ்வரூபம், இலங்கையில் போர் உச்சம் பெற ஆரமித்தபோது தெனாலி போன்றவை கூறலாம்.
9. கமல் படங்களில் எப்போதும் ஹீரோ துதி பாடும் வசனங்கள் இல்லாதது. வசூல் ராஜா பாடலை தவிர எந்த படத்திலும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவரை புகழ்வது இல்லை. உதாரணம் - விருமாண்டியில் அவரது பாட்டி கேவலமாக அவரை ஜல்லிக்கட்டில் திட்டுவார், சிங்காரவேலனில் கவுண்டமணி  (இங்கதான் அடக்கம் பண்ணி வச்சிருக்காங்க என்று குஷ்பு விடும் சொல்வார் ) கலாய்ப்பார், பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிம்ரன் 'உன்ன பாத்தா எனக்கு அந்த உணர்வே வரலைய்யா' என்பார்... ஆனால் அடுத்த முதல்வரே, தலைவரே, தல, தளபதி என்றெல்லாம் வசனம் இருப்பதில்லை.
10. நாயகன் படத்தில் இருபத்தி ஒன்பது வயதில் 60 வயது முதியவர் வேடத்தில் நடித்த மெச்சூரிட்டி. இத்தனைக்கும் படத்தில் சிறு வயது கமலை விட முதியவராக வரும் காட்சிகள் தான் மிக அதிகம்.
#கமல்ஹாசன்
ஆகச் சிறந்த கலைஞன்.
அவரை 
தலையில் தூக்கி வைத்து ஆடாவிட்டாலும், வெறுப்பை உமிழாமல் இருப்பது நலம்...

Siva Manikandan

Leave a Reply