• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகம் சுற்றும் வாலிபன் காவியம்..

சினிமா

எம்.ஜி.ஆர் இயக்கிய படம் என்பது இதன் தனிச்சிறப்பு.“நாடோடி மன்னனும்“ “உலகம் சுற்றும் வாலிபனும்“ எம்ஜிஆர் தயாரித்து, நடித்து, இயக்கிய படங்கள்.இவரது திரைப்படங்களில்“ நாடோடி மன்னனும்“, “உலகம் சுற்றும் வாலிபனும்“ தனித்துவமானைவை என்றே சொல்ல வேண்டும்.முதல் எடுத்த நாடோடி மன்னன், அதன் பெரு வெற்றியால், இவரைத் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக்கியது. இதையடுத்து எடுத்த உலகம் சுற்றம் வாலிபன், நாட்டுக்கே மன்னராக்கியது. அதாவது வெள்ளித்திரையை ஆண்டவர் முதலமைச்சரானார்..

வெளி நாட்டில் எடுத்து மிக பெரிய வெற்றி யை பெற்ற படம்.மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இயக்கிய படம்.படம் ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக காட்சிகள்‌ நகரும். பாடல்கள் அனைத்தும் சிறப்பு. டி எம் சௌந்தரராஜன்,சீர்காழி கோவிந்தரராஜன்,கே ஜே ஏசுதாஸ்,எஸ் பி பாலசுப்ரமணியன் என அனைத்து பாடகரும் பாடி பாடல்கள் ரசிக்க வைக்கும்.அந்த காலகட்டத்தில் வெளி நாட்டில் எடுக்க பட்டு மிக பெரிய வெற்றி பெற்ற படம் இதுவாக தான் இருக்கும்.எம் ஜி ஆர் அவர்கள் கட்சி தொடங்கிய கட்டத்தில் வந்த படம்.ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக சோர்வின்றி திரைக்கதை நகரும்.திரைப்படத்தில் நடிப்பை தவிர மற்ற திரை நுட்பம் களும் அறிந்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் என்று நிரூபித்த படம்.
1.ஆளுங்கட்சியின் (தி.மு.க) கடுமையான எதிர்ப்பு மற்றும் அடக்குமுறை கெடுபிடிகளையும் மீறி, மாபெரும் வெற்றிபெற்ற ஒரே தமிழ்ப்படம் மற்றும் இந்திய படம்.
2.சுவரொட்டிகளே ஒட்டப்படாமல், சிறப்பு ஸ்டிக்கர்கள் மூலமே விளம்பரப்படுத்தப்பட்டு, மாபெரும் வெற்றிபெற்ற ஒரே தமிழ்ப்படம். ஸ்டிக்கரை வடிவமைத்தவர் நடிகர் பாண்டு.
3.மறுவெளியீட்டின்போதும், அமோகவசூலைக் குவித்த சில தமிழ்ப்படங்களுள், ஒன்றாக விளங்கும்படம்.
4.அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய பெரும்பாலான பின்னணி பாடகர்களும், பாடல்கள் பாடியுள்ள ஒரே தமிழ்ப்படம்.
5.எம்.ஜி.ஆர், இப்படத்திற்கு முன்பாக தயாரித்து, இயக்கி, நடிக்கவிரும்பி முடியாமல் போனபடம் "இணைந்த கைகள்". அப்படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒருபாடல் (நிலவு ஒரு பெண்ணாகி) பாடல், இப்படத்தில் இடம்பெற்றது.
6.இப்படத்திற்கு முதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் குன்னக்குடி வைத்தியநாதன். பிறகு, பலருடைய வேண்டுதலை ஏற்று எம்.எஸ்.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். இப்படபாடல்களுக்காக, சுமார் 60,70 மெட்டுக்களை இட்டு அவர் சலித்ததும், சினந்ததும் இப்படத்தில் நிகழ்ந்தது. ஆனாலும், பாடல்கள் அனைத்தும் சாகாவரம்பெற்ற சிறந்த பாடல்களாயின. இப்படத்தின் பாடல்கேசட்டில் இடம்பெற்ற, ஆனால் படத்தில் இடம்பெறாத பாடலும் உண்டு. "உலகம் சுற்றும் வாலிபனோடு" என்ற பாடலே அது.
7.படத்தின் பெயருக்கேற்ப, பூமிஉருண்டை வடிவில், பாட்டுபுத்தகம் வெளியிடப்பட்டதும் இப்படத்திற்கு மட்டும்தான்.
8.படத்தில், முதலில் துவக்கப்பாடலே கிடையாது. சீர்காழி கோவிந்தராஜனைத் தவிர, பல பாடகர்களின் பாடல்களும் படத்தில் இடம்பெற்றநிலையில், சீர்காழி கோவிந்தராஜன் இதை எண்ணி சற்றே ஆதங்கப்பட்டார். இச்செய்தி எம்.ஜி.ஆரை எட்டியது. எனவே, அவருக்கும் ஒரு பாடலைப்பாட வாய்ப்பளிக்க வேண்டும்.. அப்பாடல், படத்தை வெற்றிபெறவிடாமல் தடுக்கமுயலும் தி.மு.கவினருக்கும் தன்செல்வாக்கை வெளிக்காட்டுவதாகவும் அமையவேண்டும் என்று கருதி, திடீரென அப்பாடலை உருவாக்கவைத்து, துவக்கப் பாடலாக அமைத்தார்.
9.எம்.ஜி.ஆரின் பிரதான நாயகியாக, இப்படத்திற்குமுன்புவரை, பலபடங்களில் நடித்துவந்த ஜெயலலிதா, இப்படத்தில் நடிக்கவில்லை. இப்படத்தில் நடிக்க, ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
10.படத்தில் இடம்பெறும் இரு தத்துவப் பாடல்களையும், வாலியோ கண்ணதாசனோ எழுதவில்லை. இருவரும், இப்படத்தில் காதல் பாடல்களையே எழுதினர். "நமது வெற்றியை நாளை" என்ற பாடலை, புலவர் வேதாவும், "சிரித்து வாழ வேண்டும்" பாடலை, புலவர் புலமைப்பித்தனும் எழுதினர்.
11.இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை, எம்.ஜி.ஆர், "பொம்மை" இதழில், "திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம்" என்ற தலைப்பில், தொடர்கட்டுரையாக எழுதினார்.இது, வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. எம்.ஜி.ஆர், தன் திரைப்படம் குறித்து எழுதிய ஒரே தொடர்கட்டுரை இதுவொன்றுதான்.
12.இப்படத்தின்மூன்று நாயகியருள் ஒருவராக நடித்த "சந்திரகலா" ஏனோ, படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகும், பிரபல நாயகியாக ஜொலிக்கவே முடியவில்லை. நடனம் கற்ற சந்திரகலா, பி.ஏ.படிப்பில் இரண்டாண்டுகள் வரையிலும் பயின்றவர். ஒருசில தமிழ்ப்படங்களே நடித்துவிட்டு, பிறமொழிப்படங்களில் நடித்த சந்திரகலா, சுமார் 50−55 வயதிலேயே, புற்றுநோயால் இறந்தார்.
14.எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வின் இறுதிக்கட்டங்களில், அவருடைய பிரதான கதாநாயகியாக விளங்கி, தொடர்ந்து பலபடங்களில் நடித்த லதா, இப்படத்தில்தான் அறிமுகமானார். இவர், இராமநாதபுரம் சேதுபதி பரம்பரை வாரிசுகளில் ஒருவராவார். லதா, இப்படத்தில் நடிக்க வழிவகுத்தவர் ஆர்.எஸ். மனோகர்.
15. படத்தின் வசூல், அக்காலத்திலேயே சுமார் நான்கரை கோடி ரூபாய் என்று தகவல் உள்ளது.
16.எவ்விதமான அரசியல் வசனமோ, கதையோ இல்லாத இப்படத்தின் வெளியீட்டில் தீவிர அரசியல் விளையாடியது சுவாரஸ்யமான சம்பவமாகும்.
17. இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், "மேலே ஆகாயம் கீழே பூமி" என்பதாகும்.
18. தாய்லாந்து படப்பிடிப்பிற்கு, அந்தநாட்டு அரசாங்கம், 10 நாட்களே அனுமதியளித்தது. படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் ஒரு விபத்து ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பினார். இதையறிந்து மகிழ்ந்த தாய்லாந்து அரசாங்கம், மேலும் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு அனுமதி அளித்தது.
19. சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில், அதிகவசூலைக் குவித்த முதல்படம் இதுதான். சுமார் 13 லட்ச ரூபாய்க்குமேலாக வசூலைக் குவித்தது.
20. 2021 ஆம் ஆண்டில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இப்படம், தமிழகம் முழுக்க 89 திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
21. எம்.ஜி.ஆர், வாலியிடம், வேடிக்கையாக, இப்படத்தை அவர் இல்லாமலே எடுக்கப் போவதாகக் கூறினார். வாலி, தான் இல்லாமல் எம்.ஜி.ஆரால் இப்படத்தை எடுக்கமுடியாதென்று கூறினார். எம்.ஜி.ஆர், ஏன் எடுக்கமுடியாது? என்றார். படத்தின் பெயரிலேயே தன்பெயர் இருப்பதாகவும், தன்னை நீக்கிவிட்டால், " உலகம் சுற்றும் பன்" என்றல்லவா வரும்? அப்பெயரில் எப்படி படம் எடுப்பீர்கள்? என்று வாலிகூற, வாலியின் சாமர்த்தியத்தை ரசித்துப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.
22.இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது, நாகேஷின் பிறந்தநாள் வந்தது. எம்.ஜி.ஆர், நாகேஷிற்கு, இன்ப அதிர்ச்சியாக, வைரமோதிரம் பரிசளித்து வியக்க வைத்தார்.
இக்காவியத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை தியாகராயர் கல்லூரியில் வரும் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்று கிழமை கோலாகலமாக நடைபெறுகிறது..அனைவரும் வருக..வருக..என வரவேற்கின்றோம்..

Santhanam Admk

Leave a Reply