• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லியோ செட்டில் தமிழ் கற்றுக்கொண்ட சஞ்சய் தத்..

சினிமா

கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு நடிகர் சஞ்சய் தத் மார்க்கெட் உச்சத்தை தொட்டு இருக்கிறது. வில்லனாக பல டாப் ஹீரோ படங்களில் அவர் மிரட்டி வருகிறார்.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்து வரும் லியோ படத்தில் அவர் நடித்து இருந்தார். அடுத்து அவர் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்கிறார்.

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சய் தத் தமிழ் கற்று கொண்டிருக்கிறார். பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் மாயா தான் அவருக்கு தமிழ் சொல்லி கொடுத்தாராம்.

அந்த புகைபடத்தை வெளியிட்டு மாயா இந்த தகவலை கூறி இருக்கிறார். 
 

Leave a Reply