• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள்

தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் கனடாத் தமிழ்க் கல்லூரியும் இணைந்து தமிழ் வளர் மையத்தின் ஊடாக நடத்தும்  பட்டப்படிப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன.
தமிழ்மொழியில் சான்றிதழ், இளங்கலை, முதுகலை போன்ற பட்டப் படிப்புகளைக் கற்கும் வாய்ப்பு கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது.
சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், மற்றும் புலம்பெயர் இலக்கியங்களின் சுவைகளை அறியக் கூடிய வாய்ப்பு.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற தமிழ் இலக்கணங்களைக் கற்று, தமிழைப் பிழையற எழுதவும் பேசவும் பாடல் புனையவும் கிடைக்கும் வாய்ப்பு.

கனடாவாழ் தமிழ்ப் பேராசிரியர்கள், ஈழத்தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ்நாட்டுப் பேராசிரியர்களின் வழிகாட்டலில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கற்கும் வாய்ப்பு.  
தமிழ் சான்றிதழ் வகுப்புகள்
இளங்கலைத் தமிழ் படிக்க விரும்புகிறீர்களா? ஈழத்தின் போர்ச்சூழலால் அல்லது ஏதோவொரு காரணத்தால்  க.பொ.த. உயர்தரப் படிப்பு படிக்காமலேயே புலம்பெயர்ந்து விட்டமையால் உங்கள் இளங்கலைப் படிப்பு கனவாகவே போய்விட்டதா?
கவலையை விடுங்கள். சான்றிதழ் படிப்பில் இணைந்து ஆறு மாதத்திலேயே நீங்கள் இளங்கலைப் படிப்பில் இணைந்து கொள்ளலாம். உங்கள் கனவையும் நனவாக்கிக் கொள்ளலாம்.
தமிழ் இளங்கலை வகுப்புகள்
இவ்வகுப்புகளில் இணைந்து கொள்வதற்கான அடிப்படைத் தகுதிகள்:

 

ஈழத்தில் தரம் பன்னிரண்டில் தமிழ் ஒரு பாடமாய் இருத்தல்.
பல்கலைக்கழக மட்டத்தில் ஏதோ ஒரு துறையில் தமிழ் ஒரு பாடமாய் இருத்தல்.
தமிழ்க் கல்லூரியின் சான்றிதழ்.
தமிழ் முதுகலை வகுப்புகள்
தமிழில் இளங்கலைப் பட்டம் வைத்திருத்தல்.
ஆழ, அகன்று தமிழைக் கற்போம். ஆசிரியர்களாக உருவாகி அடுத்த தலைமுறைக்குத் தமிழை அழகாகக் கற்றுக் கொடுப்போம்.
அழையுங்கள் - தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகம். 416 757 2006

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையத்தின் நெறிப்படுத்தலில், பேராசிரியர் சுப்பிரமணியம் நாகராசா (தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (ஓய்வு) அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற உள்ள பட்டப்படிப்பின் முதல் வகுப்பில் கற்பிக்கவுள்ள விரிவுரையாளர்ளுடன் மாணவர்கள்.
 

Leave a Reply