• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜோதிகா 

சினிமா


நடிகைகள் நாயகிகளாகவே நீடிப்பது குறைந்த காலம் மட்டுமே தான் காரணம் அவர்களுடைய உடல்வாகு தோற்றம் எல்லாமே ஒரு சில காலங்களில் மாறிவிடுவதுதான்
 நடிகர்களுக்கு அந்த பிரச்சனை பெரும்பாலும் இல்லை அவர்கள் உடல் தோற்றம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது
 கிடைக்கக்கூடிய குறைந்த காலத்தில் தங்களை நிரூபித்து வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற சிக்கல் உள்ளது 
ஆனால் இது எல்லாவற்றையும் கடந்து சில நடிகைகள் செழிப்பதுண்டு அறிமுகப்படுத்த படத்திலிருந்து இறுதிப் படம் வரை அதே அளவில் வெற்றியுடன் இருப்பவர்கள் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய ஒரு சிலர்தான் இருந்தார்கள் அதுபோல ஒருவர் தான் நடிகை ஜோதிகா 
இவர் 1998 இல் இந்தி படத்தில் அறிமுகமானார் அடுத்த வருடத்தில் தமிழில் வாலி படத்தில்  ஒப்பந்தமானார் இந்த படத்தின் கதாநாயகி சிம்ரன் தான் இவருடைய கதாபாத்திரம் அஜித்துக்கு யோசனை சொல்லும் ஒரு தோழியை போன்ற பாத்திரம் இருப்பினும் அந்த படத்திற்கு அறிமுக நடிகை விருதை பெற்றவர் ஜோதிகா 
பொதுவாக நடிகைகள் கொடுத்த வேலையை செய்துவிட்டு அமைதியாக இருந்து விடுவார்கள் ஆனால் இவர் தன்னுடைய பல்வேறு பரிமாணங்களை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் என்று சொல்லலாம்
 இவருடைய திரைக் குணாதிசயமாக துடுக்கான பெண், அதிகம் பேசுபவர் மேலும் பொசசிவ்னஸ் மிகுந்த பெண் ஈகோ சென்ட்ரிக் என்பது போன்ற சில வற்றை நிர்மாணித்து அது போன்ற படங்களை அவருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது 
அடுத்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார் இந்த படத்தில் இவர் முதல் முதலாக சூர்யாவை சந்திக்கிறார் இந்த படத்தில் அவரிடம் இணையாக நடித்த போதே அவர்களுக்குள் காதல் மலர்கிறது பின்னாளில் அது திருமணத்தில் முடிந்தது
 இந்த படத்திலும் அதுபோல காதலுக்காக ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் வேலைக்கு செல்வது போல் சென்று அவர்கள் மனதை கவர்வது என்கின்ற திட்டம் போட்டு செயல்படும் படம் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருந்த இந்த படத்திலும் இவர் புதுமுக நடிகை போல் இல்லாமல் நன்கு நடித்திருந்தார் 
அடுத்த படம் முகவரி அஜித்துடன் இணைந்து செய்தார் அஜித்தின் உயர்வுக்காக பாடுபடுவது போன்ற படம் துடுக்கு பெண்ணாகவும் பின்பு பொறுப்பு வாய்ந்த பெண்ணாக அஜித்தின் வாய்ப்புகளுக்கு முயற்சிக்கும் பெண்ணாகவும் செய்து இருப்பார்
குஷி விஜய்யுடன் இந்த படத்தில் இவருடைய திரைப்பட குணாதிசயமான ஈகோ  மற்றும் பொஸசிவ் நிறைந்த பெண்ணாகவும் நடித்திருப்பார் கதைக்கு தேவைப்படக்கூடிய அம்சங்கள் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் 
ரிதம் ஒரு சிறிய வேடம் தான் இருப்பினும் கதைக்கு முக்கிய திருப்பத்தை தரக்கூடிய வேடம் என்பதால் மனதில் நின்றிருப்பார்
 அதன் பிறகு உயிரிலே கலந்தது மீண்டும் சூர்யாவுடன் 
அதற்கு அடுத்த படம் தெனாலி நகைச்சுவைக்கு பெயர் பெற்ற அந்த படத்தில் இவருடைய கதாபாத்திரமும் சிறப்பானதாக இருக்கும் கமலுடன் நடிக்க வாய்ப்பு கச்சிதமாக பயன்படுத்தி இருப்பார் 
சிநேகிதியே படத்தில் ஒரு செய்யாத கொலைக்கு இவர் மீது பழி விழ இவர் மறைந்து செயல்பட வேண்டிய நிலை முதல் பாதியில் துடுக்காகவும் அதன் பின் பயந்து ஓட வேண்டிய நிலையிலும் இருக்கும் இந்த படத்திலும் சிறப்பாக செய்திருப்பார்
 டும் டும் படம் நகைச்சுவையான சொல்லப்பட்ட இந்த படத்தில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளையோடு சேர்ந்து முயல்வது போல கதை நடிக்க நல்ல வாய்ப்பு 
லிட்டில் ஜான் ,ஸ்டார் போன்ற படங்கள் இவருடைய வழக்கமான பாணியே இருக்கும்
 அதன் பிறகு பூவெல்லாம் உன் வாசம் சிறந்த திரைக்கதை குஷி போலவே ஈகோவினால் தன்னுடைய காதலை துறக்க வேண்டிய சூழலில் இருப்பார் பின்னர் அதெல்லாம் சரியாகி ஒன்றிணைவதுபோன்ற கதையில் நடிக்க ஏராளமான வாய்ப்பு அதை கச்சிதமாக செய்திருப்பார்
 பிறகு  12 பி, ஒன் டூ த்ரீ, ராஜா போன்ற படங்களில் வழக்கமான வேடம் இருப்பினும் அதை சிறப்பாக செய்திருப்பார். 
தூள் படம் ஆக்ஷன் அரசியல் கலந்த படம் அதே சமயம் இவருக்கான வாய்ப்பு இருக்கும்
அதன் பிறகு பிரியமான தோழி முகவரி போன்றே தன் கணவனான மாதவனுக்கு அவர் உயர்வுக்காக பாடுபடுவது போன்ற படம் இதில் சோகமும் இருக்கும் துள்ளலும் இருக்கும் பின்னர் மகிழ்ச்சியும் இருக்கும் என்பது போன்ற கதை இவருடைய நடிப்பும் பேசப்பட்டதாக இருந்தது 
காக்க காக்க படம் ஒரு ஸ்டைலிஷ் ஆக இருந்தது அதில் இவருடைய கதாபாத்திரம் சிறப்பானது ஒரு ஆசிரியராக வந்து காவல் அதிகாரியை கரம் பிடிப்பது போன்ற படம் சிறப்பான கவனத்தை பெற்றது
 திருமலை, த்ரீ ரோசஸ் ,,அருள் போன்ற படங்களில் பெரிய வேலை இல்லை இருப்பினும் அதையும் சிறப்பாகவே செய்திருப்பார்
 பேரழகன் படத்தில் கண் பார்வை இல்லாதவராக நடித்திருப்பார் அவருடைய நடிப்பு இயல்பானதாக இருக்கும் முக பாவனைகளும் தனது வேடத்திற்கு ஏற்ப செய்திருப்பார்

 மாயாவி படத்தில் நடிகையாகவே வந்தார் நேரில் அவரை பார்த்தது போன்ற ஒரு வேடத்தை ஏற்றிருப்பார் இவரை கடத்தி வைத்திருக்கும் சூர்யாவிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இவர் காட்டும் உணர்ச்சிகள் மிகச் சிறப்பானதாக இருக்கும் 
அடுத்த படம் சந்திரமுகி முதலில் இவருடைய வேடத்தில் சிம்ரன் நடிப்பதாக இருந்தது அந்த நேரத்தில் அவர் கருவுற்று இருந்ததால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவர் நடிப்பை பார்த்த பின்பு இந்த வேடத்தில் வேறு ஒருவர் நடித்திருந்தால் இவ்வளவு தூரம் அது பேசப்பட்டு இருக்காது என்பது போன்ற ஒரு அற்புதமான நடிப்பு முகபாவனைகள் எல்லாம் மிரட்டல் ஆக இருக்கும் ரா ரா பாடல் வெகு காலம் பலராலும் முணுமுணுக்கப்பட்டது அது மட்டும் இல்லாமல் அதை இமிடேட் செய்வது பல படங்களில்காட்சிகள் வந்தது
 அதன் பிறகு வேட்டையாடு விளையாடு வழக்கமான கதாபாத்திரத்தில் இருந்து சற்று மாறுபட்டது மணவாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு விரக்தியினால் தற்கொலை செய்து கொள்ளும் நேரத்தில் கமலை சந்திப்பார் அந்த நேரத்தில் அவருடைய உணர்வுகளை முகத்தில் வெகு சிறப்பாக காண்பிப்பார்
 கமலுடன் நட்பு பின்பு காதலாக மாறும் தருணங்களில் எல்லாம் அந்த மாற்றங்களை வெகு சிறப்பாக செய்திருப்பார்
 சில்லுனு ஒரு காதல் ஒரு மாறுபட்ட கதை அமைப்பு கணவனின் முன்னாள் காதலியை கண்டுபிடித்து கணவனுடன் பேச வைக்கும் அது போன்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார்
 மொழி படம் அவருடைய முந்தைய படங்களை காட்டிலும் இவருக்கு அதிக வாய்ப்புகள் அதன் மூலம் புகழும் கிடைத்தது வாய் பேசாத கதாபாத்திரம் ஆனால் உணர்ச்சிகளை வெளிக்காட்ட அதிக வாய்ப்பு ஒவ்வொரு காட்சியிலும்பிரமிக்க வைப்பார் இவருடைய திரை வரலாற்றில் அது ஒரு முக்கிய படம் 
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவர் ஒரு எதிர்மறை நாயகியாக வந்திருப்பார் உருட்டல் ,மிரட்டல் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் உள்ள கதாபாத்திரம் மிகச் சிறப்பாகவே வடிவமைக்கபட்டிருக்கும்
 இதன் பிறகு அவர் திருமணமாகி சிறிது காலம் கடந்த பிறகு 36 வயதினிலே படம் இந்த படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு ஜோதிகாவை நாம் பார்க்கலாம் இளமைத்துள்ளல் என்பது இந்த படத்தில் இருக்காது இருந்தாலும் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவியாகவும் தன்னுடைய விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் அதன் மூலம் இவருக்கு கிடைக்கும் பெயர் கணவனின் பொறாமை போன்ற கதை  பேசப்படக்கூடிய ஒன்றாக இருக்கும் 
மகளிர் மட்டும் ஒரு துணிச்சலாக பெண்ணாக பெண்களுக்கு உரிமையை மீட்டு கொடுப்பது போன்ற பாத்திரம்இவருக்கு நன்கு பொருந்தி வரும்
நாச்சியார் படம் பாலா இயக்கத்தில் வந்து ஒரு முரட்டு காவல் அதிகாரியாக வந்தார் வழக்கமான இவருடைய கதாபாத்திரத்தில் இருந்து மாறுபட்ட படம் அந்த மாறுபாட்டை தெளிவாக காட்டியிருப்பார்
 அதன் பிறகு காற்றின் மொழி இதிலும் ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பது போல ஒரு தன்னம்பிக்கை தரக்கூடிய ஒரு கதாபாத்திரம்
ராட்சசி நல்ல கதை ,வலியுறுத்த வேண்டிய கருத்து இவர் முன்னாள் ராணுவ அதிகாரி என்பதற்கான மிடுக்கு அதில் வெளிப்படும் தந்தை இறந்த அதே நாள் மதியம் பள்ளிக்கு வருவது போன்ற இறுகியமனதுள்ள கதாபாத்திரம் வழக்கமான இவருடைய குறும்பு, சிரிப்பு போன்றவை இல்லாம ஒரு மிடுக்கான கதாபாத்திரமாக மிளிர்ந்திருப்பார்
அதன் பிறகு ஓ டி டி தளத்தில் பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்தார்
 பொதுவாகவே ஒரு துணிச்சலான துடுக்காகவும் வெகுளியான பெண்ணாகவும் பல படங்களில் வந்து கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்டிருப்பார்
சில பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருந்தார்
 இன்னும் காலம் இருக்கிறது இவர் சாதிக்க நிறைய இருக்கிறது சாதிக்கலாம்.

Vedanthadesikan Mani Lion

Leave a Reply