• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பளம் அதிகரிக்கப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் - ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை

பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எதனடிப்படையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் எவ்வளவால் அதிகரிக்கப்படும்? பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

மின் கட்டணம் நான்கு மடங்குகளால் அதிகரித்துள்ளது. ஏனைய செலவுகள் அனைத்தும் வரம்பில்லாமல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில்,அரச ஊழியர்களின் சம்பளத்தை எவ்வளவால் அதிகரிப்பீர்கள் என்று ஜனாதிபதியிடம் கேட்கிறோம்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவிக்கும் போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கை என்ன என்று கேட்கின்றோம். மக்களை ஏமாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறுகின்றோம்.

நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும், சந்தையில் இன்னும் குறையவில்லை.

தாங்க முடியாத பொருளாதார அழுத்தம் காரணமாக இன்று அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

அரச ஊழியர்களின் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply