• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாசா வெளியிட்ட பகீர் தகவல் - அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை தாக்கவிருக்கும் சிறுகோள் 

பென்னு என்ற சிறுகோள் 22 அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை கடுமையாகத் தாக்கக்கூடும் என்று நாசா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிரகத் துண்டுகள் ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையின்றி இலக்கில்லாமல் சுற்றி வருகின்றன, இவற்றால் பூமிக்கு அவ்வப்போது ஆபத்து ஏற்படுகின்ற நிலையில் நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் அத்தகைய சிறுகோளை அடையாளம் கண்டுள்ளனர்.

நாசா ஆராய்ச்சியாளர்களின் விவரங்களின்படி, இந்த சிறுகோள் 1,610 அடி அகலம் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த மிகப்பெரிய சிறுகோள் பூமியை தாக்கும் நோக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சிறுகோளிற்கு பென்னு (Bennu) என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுகோள் சுமார் 159 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை கடுமையாக தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் இந்த சிறுகோள் தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் இல்லை என்று கூறிய விஞ்ஞானிகள்,  விரைவில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த சிறுகோள் புவியீர்ப்பு பாதையில் சென்றால் பூமியை தாக்கும் அபாயம் உறுதியாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், பென்னு சிறுகோள் நாசாவால் அறிவிக்கப்பட்ட ஆபத்தான சிறுகோள்களின் பட்டியலில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் வரும் போது அது 46.5 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply