• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் பொருளாதார கணிப்புகளை உயர்த்தியது உலக வங்கி

இலங்கை

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, பணவீக்கத்தை குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது.

சுற்றுலா வருவாய் மற்றும் அதன் நாணயத்தின் மதிப்பீட்டின் மூலம் இலங்கை பயனடைந்துள்ளது என்றும் உலக வங்கி கூறியுள்ளது.

ஆகவே முன்னதாக 2024 இல் ஒரு விகிதம் என மதிப்பிடப்பட்ட பொருளாதாரம் 1.7 விகிதம் விரிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் கண்ணோட்டம் இன்னும் நிச்சயமற்ற தன்மையினால் மங்கலாக இருப்பதாகவும் பாதகமான அபாயங்கள் இருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவதைப் பொறுத்து நிலைமை மாறலாம் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது.
 

Leave a Reply