• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி - வெளியான அதிர்ச்சி பின்னணி 

கனடா

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தேசிய பூங்கா ஒன்றில் கரடியால் தாக்கப்பட்டு தம்பதி ஒன்று பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுடன், நாய் ஒன்றும் கரடி தாக்கியதில் பலியாகியுள்ளது. பலியான தம்பதியின் நண்பர் ஒருவர் தெரிவிக்கையில், தவறான நேரத்தில் தவறான இடத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

கரடி பாதுகாப்பு என்ற நிறுவனத்தை நடத்திவரும் Kim Titchener தெரிவிக்கையில், அந்த தம்பதியும் அவர்களின் வளர்ப்பு நாயும் Banff தேசிய பூங்காவில் கரடியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், அவர்களிடம் அந்த நேரம் கரடிகளை விரட்டும் ஸ்பிரே இருந்ததா என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கரடி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, வானிலை காரணமாக ஹெலிகொப்டரை பயன்படுத்த முடியாத நிலையில், வாகனத்தில் சிறப்பு அதிகாரிகள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.

அவர்களால் நள்ளிரவு 1 மணிக்கு சம்பவயிடத்தில் சேர முடிந்துள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவரது சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தெரிய வாய்ப்பில்லை எனவும், ஆனால், இரவு 8 மணி என்பதால், அந்த தம்பதி கூடாரம் அமைத்திருக்க வாய்ப்பிருப்பதாக Kim Titchener தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த Banff தேசிய பூங்காவானது கிரிஸ்லி மற்றும் கருப்பு கரடிகள் அதிகமாக புழங்கும் இடமென கூறுகின்றனர்.

Leave a Reply