• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாகர்ஜுனாவிற்கு ஜோடியாகும் ரஜினியின் மருமகள்

சினிமா

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் நடிகை மிர்னா.

இவர் இதற்குமுன் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், மிர்னாவிற்கு தற்போது மக்கள் மத்தியில் ஜெயிலர் திரைப்படம் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து புதிய தெலுங்கு படம் ஒன்றில் நடிகை மிர்னா கமிட் ஆகியுள்ளார். 

தெலுங்கில் உருவாகும் நாகர்ஜுனாவின் Naa Saami Ranga எனும் படத்தில் இரு கதாநாயகிகள். அதில் ஒருவராக நடிக்கிறார் மிர்னா. 

ஜெயிலர் வெற்றிக்கு பின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற மிர்னாவிற்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply