• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான்கு நாட்களில் சந்திரமுகி 2 செய்துள்ள வசூல்.. 

சினிமா

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடித்திருந்த நிலையில், கங்கனா ரனாவத் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார்.

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், நேற்று ரூ. 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply