• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தானாக பால் சுரந்த பசு - போட்டி போட்டு பக்தர்கள் செய்த காரியம் 

இந்தியா

இந்திய மாநிலம் தமிழகத்தில் கோவில் ஒன்றில் பசு மாடு ஒன்றின் மடுவில் இருந்து தானாக பால் சுரந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அருபடை வீடுகளில் ஒன்றானதும், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாவி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக மாறி வருகின்றது.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளியூரில் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதில் குறிப்பாக குலம் அபிவிருத்தியடைய பசு மாட்டை கோ தானமாக கோவிலுக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் இதற்கு 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி கொடுக்க வேண்டுமாம்.

இதனை செய்யாத சிலர் பசு மாட்டை கோவில் வளாகத்திலேயே அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால் ஆங்காங்கே சுற்றித்திரிந்து வருகின்றது.

இந்நிலையில் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த ஒரு பசு மாட்டில் திடீரென பால் சுரந்து வெளியேறியது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்து பசுவை தொட்டு வணங்கியதுடன், தண்ணீர் போத்தலில் பாலை பிடித்தும் செல்கின்றனர்.

Leave a Reply