• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - மாநகர சபை எச்சரிக்கை

இலங்கை

அதி தீவிர போசாக்கு குறைபாடுடையவர்கள் காணப்படும் நகரமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போசாக்கு மாதமான ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையின்படி தீவிரமான போசாக்கு குறைப்பாடுடன் சிறுவர்கள் காணப்படும் பிரதேசமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதி தீவிர போசாக்கு குறைப்பாடு உள்ள சிறுவர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் அதிகளவில் காணப்பட்டார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் 1439 சிறுவர்களும் குருநாகலயில் 1432 சிறுவர்களும் இரத்திரனப்புரி பிரதேசத்தில் 980 சிறுவர்களும் புத்தளம் பிரதேசத்தில் 909 சிறுவர்களும் அதிக போசனை குறைப்பாடுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரத்தல் 320 சிறுவர்களும் அதில் 64 சிறுவர்கள் அதி தீவிர போசாக்கு குறைப்பாடு நிலையில் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கு விசேடமான உணவுகள் வழங்கப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply