• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடனை மீளச் செலுத்தும் விடயத்தில் அரசியலமைப்பு மீறல்கள் - மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை

வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாது என்று அரசாங்கம் கூறிய விடயத்தில் அரசியலமைப்பு மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாது என்று அரசாங்கம் கூறும் போது நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகிய அரசியலமைப்பை மீறி சில விடயங்களை செய்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதும் இதனால்தான் என்று கூறினார்கள்.

என்னுடைய கருத்தின்படி இந்த நாட்டிலுள்ள அதிகாரியோ அமைச்சரோ அல்லது இராஜாங்க அமைச்சரோ அரசியலமைப்பை மீறுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்பது உரிய அதிகாரிகளின் கடமை மற்றும் உரிமை.

கடனை மீள செலுத்த முடியாது என்று கூறியதில் அரசியலமைப்பு மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பகிரங்கமாக கூறுகின்றேன்.

நிதி அமைச்சு என்ற ரீதியிலும் மத்திய வங்கி என்ற ரீதியிலும் அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply