• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விரிவான கடன் வசதியின் கீழ் மீளாய்வு கலந்துரையாடல் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் மீதான நம்பிக்கையை அதிகரித்து, இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 2 வாரங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல் தொடரின் இறுதிக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறுகின்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

Leave a Reply