• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிஸில் புர்கா அணிய தடை

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிய தடை விதிக்க வகை செய்யும் மசோதாமீது, நேற்று சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. புர்கா தடை மசோதாவுக்கு ஆதரவாக 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 29 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, மசோதா கீழவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே அது மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
  
அந்த மசோதா புர்கா தடை என அழைக்கப்பட்டாலும், விளையாட்டுப் போட்டிகளைக் காண வருபவர்கள் முகத்தை மறைக்கும் வகையில் கட்டும் துணி, பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் அணியும் நிகாப் என, மொத்தத்தில் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளை மறைக்கும் வகையில் உடை அணிய தடை என்பதே அதன் பொருளாகும்.

தடையை மீறுபவர்களுக்கு, 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

பள்ளிகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பொதுப்போக்குவரத்து, உணவகங்கள், கடைகள், திரையரங்குகள் முதலான பல பொது இடங்களுக்கு இந்த தடை பொருந்தும்.

ஆனாலும், தூதரகங்கள், மத சம்பந்தமான இடங்கள் ஆகியவற்றிற்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் மாகாணங்களான Ticino மற்றும் வடக்கு St. Gallen மாகாணங்களில் ஏற்கனவே புர்கா தடை அமுலில் உள்ளது. மேலும், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply