• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொறன்ரோவில் ட்ராக் வண்டியிலிருந்து கீழே வீழ்ந்த 5 மில்லியன் தேனீக்கள்

கனடா

ரொறன்ரோவில் வீதியொன்றில் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்றிலின் பெட்டிகளிலிருந்து ஐந்து மில்லியன் தேனீக்கள் கீழே வீழ்ந்துள்ளன.

தேனீக்களை கொண்டு சென்ற ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து ரொறன்ரோவின் பேர்லிங்டனில் குயில்ப் வீதியில் இடம்பெற்றுள்ளது.

ட்ரக் வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த வீதியில் பயணித்த சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வாகனத்தின் யன்னல்களை திறக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கீழே வீழ்ந்த தேனீப் பெட்டிகள் மீளவும் ட்ரக் வண்டியில் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த ட்ரக் வண்டியில் சுமார் ஐந்து மில்லியன் தேனீக்கள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பான்மையான தேனீக்கள் பாதுகாப்பாக மீளவும் பெட்டிகளில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply