• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹீரோயினை மிஞ்சிய அனிகாவின் அழகிய புகைப்படம் 

சினிமா

நடிகை அனிகா புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸைக் குவித்து வருகின்றது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவும் பிரபலமானார்.

 அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

ஆனால் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸை குவித்து வருகின்றது. ஆம் எப்பொழுதும் கவர்ச்சி உடையில் புகைப்படத்தினை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள புடவையணிந்து இவர் ஓணம் கொண்டாடியுள்ளார். புடவையிலும் பயங்கர கிளாமராக இருக்கும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
 

Leave a Reply