திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர்
பிறப்பு 28 JUN 1944 / இறப்பு 12 APR 2026
யாழ். காரைநகர் தேரடைப்பைப் பிறப்பிடமாவும், இல.39 மேரிஸ் வீதி, பம்பலபிட்டி கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், விஸ்வலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கவாசகர்(Grindlyz Bank) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநந்தினி, சிவமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பாலசுப்ரமணியம், கனகேந்திரன், இராயேஸ்வரன், தர்மபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை, மகேஸ்வரி, சரஸ்வதி மற்றும் திலகவதி, இராயேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கதிர்காமநாதன், ஜெயகலா ஆகியோரின் அன்பு மாமியும்,
அரன், அரங்கன், ஆரபி, அபினா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-04-2026 புதன்கிழமை அன்று இல.39 மேரிஸ் வீதி, பம்பலபிட்டி கொழும்பு என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் - மகன்
Mobile : +19052423634
நந்தினி - மகள்
Mobile : +14169394660























Leave a Reply