• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினியிடம் அது இல்லை.. நடிகை சிம்ரன் ஓபன் டாக்

சினிமா

90-ஸ் கிட்ஸின் மனதை கவர்ந்த நாயகிகளில் ஒருவர் சிம்ரன். இவர் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

இருந்தும் ரஜினி - சிம்ரன் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில், தர்மன் திரைப்படத்தில் சிம்ரன் இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பு வெளியானது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது இவர்கள் இருவரையும் மீண்டும் ஒன்றாக திரையில் பார்க்க வேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் குறித்து நடிகை சிம்ரன் வெளிப்படையாக பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, "என்னுடைய Favourite நடிகர் ரஜினி தான்; நான் அவருடைய வெறித்தனமான ரசிகை. அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை; ஈகோ எல்லாம் அவருக்கு இல்லை; கீழே வந்து பழகுவார். பேட்ட படம் ஒரு டீசர் தான். அந்த படத்தில் வேலை செய்ததைவிட அதிகம் வேலை செய்ய வேண்டும் என ரஜினியிடம் கூறியிருந்தேன். கமலின் தயாரிப்பு, ரஜினி ஹீரோ என்பது மிகப்பெரிய காம்பினேஷன். அதில் ஒரு பகுதியாக நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.  
 

Leave a Reply