அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடும் கனேடிய அரசியல்வாதிகள் - அமெரிக்க தூதரகம் குற்றச்சாட்டு
கனடா
U.S. embassy accuses Canadian politicians of interfering in American elections: கனேடிய அரசியல்வாதிகள், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவதாக அமெரிக்க தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி, நாடாளுமன்றத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு செய்யும் வகையிலான இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிட கனேடிய அரசியல்வாதிகள் திட்டமிடுவதாக கனடாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
கனடாவுக்கான அமெரிக்கத் தூதரான பீற் ஹோக்ஸ்ட்ரா, தேர்தல் தலையீட்டின் அறிகுறிகளுக்காக கனேடிய அரசியல்வாதிகளை அமெரிக்க அதிகாரிகள் கவனமாகக் கண்காணித்து வருவதாக இந்த மாத துவக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு ஒன்ராறியோ மாகாணத்தால் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்கள், அரசியல் தலையீடாகக் கருதப்படலாம் என்று கூறியுள்ளார் பீற்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன் சுங்க வரிகளை விமர்சித்தும், தடையற்ற வர்த்தகத்தை ஆதரித்தும் பேசிய காணொளிக் காட்சிகளைப் பயன்படுத்தி, ஒன்ராறியோ, ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது.
அதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இந்நிலையில், அமெரிக்கத் தொழில்துறை அமைச்சரான மெலானி ஜோலி மற்றும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் சமீபத்திய கருத்துக்களை மேற்கோள் காட்டிய பீற், அவையும் தலையீடாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய வாரங்களில், கனேடிய அரசியல்வாதிகள் அமெரிக்க அரசியலில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார் பீற்.
செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்ப் நிர்வாகத்தை விமர்சித்திருந்தார்.
இப்போது, நுகர்வோருக்கான விலைகளை உயர்த்தும் செயல்களைச் செய்யும் ஒரு விடயம் நடந்துகொண்டிருக்கிறது என்று கூறிய ட்ரூடோ, உங்களின் மிகப் பழமையான மற்றும் சிறந்த கூட்டாளிகளில் ஒருவருடன் சண்டையிடுவதன் மூலம், அமெரிக்காவிற்கு எந்த நன்மையையும் ஏற்படுத்த முடியாது என்றும் கூறினார்.
இதற்கிடையில், பீற் தனது பேட்டியில், அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நாடுகளை குறிவைத்து பதிலடி வரிகளை விதிப்பது குறித்து ஜோலி கருத்து தெரிவித்ததாக கூறினார்.
மேலும், கனேடியர்களின் எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் தலையீடாக அமைந்தால், அமெரிக்கா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் பீற் கூறியுள்ளார்.





















